என் மலர்
நீங்கள் தேடியது "மொழிப்போர் தியாகிகள்"
- காரைக்குடியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
- முடிவில் நகர தலைவர் சன் சுப்பையா நன்றி கூறினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் நகர தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கினார். நகர செயலாளர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்புரையாற்றினார். தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் துணை வேந்தருமான சபாபதி மோகன், தலைமை கழக பேச்சாளர் முகவை ராமர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் மாநில மாணவரணி துணை செயலாளர் பூர்ணசங்கீதா, தேவகோட்டை நகர செயலாளர் பாலமுருகன், கல்லல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நகர்மன்ற உறுப்பினர்கள் மைக்கேல், கார்த்திகேயன், சித்திக், ஹேமலதாசெந்தில், தனம்சிங்கமுத்து, பூமிநாதன், நாச்சம்மை, நகர துணை செயலாளர் கண்ணன், வட்ட செயலாளர்கள் பாண்டி, ரமேஷ், விஜயகுமார், முகமதுகனி, மாவட்ட பிரதிநிதி சேவியர் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் சன் சுப்பையா நன்றி கூறினார்.
- பொது பட்ஜெட் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை மட்டுமே கொண்டு இருக்கிறது.
- பட்ஜெட்டில் மக்கள் நலனையும், அவர்களது வாழ்வியல் மேம்பாட்டையும் முன்வைக்கிற திட்டங்கள் எதுவுமில்லை.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, இப்போது தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளை கண்டறிந்து, அவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகையை வழங்குவோம் என அறிவித்திருப்பது அப்பட்டமான மோசடித்தனமாகும்.
சென்னையில் மொழிப்போர் தியாகி நடராஜன், தாளமுத்துவுக்கு நினைவிடம் அமைக்கப்படுமென அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேசமயம், தாளமுத்து, நடராஜன் ஆகிய இருவரது நினைவு நாள் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், மொழிப்போர் எழுச்சியைக் கொண்டு அதிகாரத்திற்கு வந்த தி.மு.க., இப்போதுதான் அவர்களுக்கு நினைவிடம் கட்ட முற்படுகிறதென்பது வரலாற்றுப்பேரவலமாகும்.
பொது பட்ஜெட் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை மட்டுமே கொண்டு இருக்கிறது. மக்கள் நலனையும், அவர்களது வாழ்வியல் மேம்பாட்டையும் முன்வைக்கிற திட்டங்கள் எதுவுமில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பொதுக் கூட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மிகச்சிறப்பாக எழுச்சியோடு ஏற்பாடு செய்துள்ளார்.
- கல்வியில் நாம் ஏற்கனவே மிகப்பெரிய சாதனை செய்து கொண்டிருக்கிறோம்.
சென்னை:
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பல்லாவரம் கண்டோன்மெண்டில் மாவட்டக் கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
இந்த வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மிகச்சிறப்பாக எழுச்சியோடு ஏற்பாடு செய்துள்ளார்.
ஆண்களுக்கு நிகராக, ஆண்களைவிட அதிகமாக, தாய்மார்கள், பெண்கள் பங்கேற்றுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
மொழி உரிமைதான் மாநில உரிமை.
இன்றைக்கு என்னென்ன வழிகளில் இந்தி சமஸ்கிருதத்தை திணிக்க முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் ஒன்றிய அரசு மொழி திணிப்பை மேற்கொண்டு வருகிறது.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிவிட்டோம் என்று சொல்கிறார்கள். ஆனால் மக்கள் அதை நம்பவேமாட்டார்கள். எனவே அ.தி.மு.க. பா.ஜ.க.வை விரட்டியடிக்க வேண்டும். 2024 மக்களவை தேர்தலில் 2 கட்சிகளையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
கல்வியில் நாம் ஏற்கனவே மிகப்பெரிய சாதனை செய்து கொண்டிருக்கிறோம். இந்தி பாடம் இல்லாமலேயே இதையெல்லாம் நாம் சாதித்து காட்டியிருக்கிறோம்.
இந்தி திணிப்பை போலவே இப்போது நீட் நெக்ஸ்ட் என்று அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தமிழ்நாட்டிற்குள் திணிக்கிறார்கள். இதை மாற்றிக்காட்டுவோம்.
2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெல்லச் செய்வோம்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் பொதுக் கூட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. பொதுக் கூட்டம் நடைபெற்ற இடம் மட்டுமின்றி பக்கத்து ரோடுகளிலும் கூட்டம் அலை மோதியது.
- நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ள நிலையில் விஜய் தற்போது மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளார்.
- மேடையில் ஏறி விஜய்க்கு சல்யூட் அடித்த சம்பவமும் நிகழ்ந்தது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வருகை தந்துள்ளனர்.
நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ள நிலையில் விஜய் தற்போது மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளார். நடந்துவரும் பாதையின் இருபுறமும் தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தவெக கட்சிக் கொடி வடிவிலான துண்டுகளை மேடை மீது அவர்கள் வீசினர். அதை அன்போடு எடுத்து தனது தோளில் அணிந்துகொண்டார்.
அவ்வாறு வீசப்பட்ட கொடிகள் பலவற்றை எடுத்து தனது தோளில் அவர் போட்டுக்கொண்டது தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. பாதுகாவலர் ஒருவரும் உற்சாக மிகுதியில் நடைபாதை மேடையில் ஏறி விஜய்க்கு சல்யூட் அடித்த சம்பவமும் நிகழ்ந்தது.
நடைபாதையிலிருந்து நிகழ்ச்சி மேடையில் ஏறிய விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த மாமன்னர்கள், மொழிப்போர் தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- 1937 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண அரசு பள்ளிகளில் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்தது.
- நடராசனின் இறுதி ஊர்வலமும், தாளமுத்துவின் இறுதி ஊர்வலமும் பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது.
மொழிப்போர் தியாகிகளை நடராசன், தாளமுத்துவுக்கு சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோளை ஏற்று மொழிப்போர் ஈகியர், நடராசன், தாளமுத்து இருவருக்கும் உருவச் சிலைகள் எழுப்பப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
1937 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண அரசு பள்ளிகளில் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்தது. அதை எதிர்த்து பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தலைமையில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது.
அந்தப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்ட மாவீரன் நடராசன் 1939 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் சிறையிலேயே உயிர்நீத்தார்.
அவரைத் தொடர்ந்து 1939 மார்ச் மாதம் 11 ஆம் நாள் தாளமுத்துவும் சிறையிலேயே உயிரிழந்தார். நடராசனின் இறுதி ஊர்வலமும், தாளமுத்துவின் இறுதி ஊர்வலமும் பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது.
தாளமுத்துவை அடக்கம் செய்துவிட்டு மூலக் கொத்தளம் இடுகாட்டில் உரையாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் " விடுதலைப் பெற்ற தமிழ்நாட்டில் பெரியாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச் சிலை எழுப்ப வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
இதுவரையிலும் செயல் வடிவம் பெறாமலிருந்த பேரறிஞர் அண்ணாவின் அறிவிப்பைத்தான் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் முன் வைத்தோம்.
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் உழைத்தவர்களைப் பெருமைப்படுத்திவரும் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோளை ஏற்று மொழிப்போர் ஈகியர் நடராசன், தாளமுத்து ஆகியோருக்குச் சிலை எழுப்பிச் சிறப்பு சேர்ப்பது பாராட்டுக்குரியது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தவாறு அந்தச் சிலைகளைத் தந்தை பெரியார் சிலையோடு சேர்த்து நிறுவ வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
1965 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் போலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இராசேந்திரனின் நினைவு நாள் இன்று( 27.01.2025).
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் நுழைவு வாயிலில் அவருக்குச் சிலை எழுப்பியுள்ளார்.
அந்தச் சிலையின் பீடத்தை மேம்படுத்தி அழகுபடுத்த வேண்டுமென்றும், அவரை அடக்கம் செய்த பரங்கிப்பேட்டையில் இராசேந்திரனுக்கு நினைவு மண்டபம் ஒன்றை எழுப்பி அவரது ஈகத்தைப் பெருமைப்படுத்த வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.