search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசியக்கொடி ஏற்றினார்"

    • ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • தொடர்ந்து காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ. சி. பூங்கா மைதானத்தில் நடைபெற்ற 74 -வது குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து காவல் துறை, மருத்துவம், வேளாண்மை, பள்ளிக்கல்வி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட துறைகளில் சாதனை புரிந்த 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

    இதனையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வழக்கமாக குடியரசு தின விழாவில் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

    ஆனால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    குடியரசு தின விழாவையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தளங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், காளை மாட்டு சிலை, மணிக்கூண்டு, பஸ் நிலைய,ம் ஸ்வஸ்திகார்னர், ஜி.எச். ரவுண்டானா, ரெயில் நிலையம் போன்றவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் கோபி, பவானி, அந்தியூர், பெருந்துறை, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஈரோடு ரெயில் நிலையத்திலும் பயணிகள் உடமை தீவிர பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. 

    ×