என் மலர்
நீங்கள் தேடியது "கவுன்சிலர்களின் கூட்டம்"
- உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களின் கூட்டம் நடந்தது.
- இதனைத்தொடர்ந்து தனியார் மகாலில் வெடி வெடிக்க தடை பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களின் கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத்தலைவர் சகுந்தலா தலைமை தாங்கினார். நகராட்சி பொறுப்பு ஆணையாளர் பாண்டித்தாய் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சிவக்குமார், சுசிலா மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நகராட்சி 24 வார்டுகளிலும் குடிநீர் வசதி, ரோடு வசதி, தெரு விளக்கு என தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து கவுன்சிலர்களின் கோரிக்கையாக உசிலம்பட்டி பகுதிகளில் தனியார் மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகளுக்கு வெடி வெடிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தனியார் மகாலில் வெடி வெடிக்க தடை பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.