என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தன்னிறைவு"
- குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
- மேயர் மகேஷ் தகவல்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநக ராட்சி கூட்டம் நேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் ஆணை யாளர் ஆனந்தமோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, செல்வகுமார், ஜவகர், கவுன்சிலர்கள் மீனாதேவ், ஸ்ரீலிஜா, ரமேஷ், டி.ஆர். செல்வம், அனிலா சுகுமாரன், நவீன் குமார், அய்யப்பன் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநக ராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது. குடிநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2-வது வார்டுக்கு உட்பட்ட ஆளுர் பகுதியிலும் தண்ணீர் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பொது நிதியிலிருந்து அந்த பகுதியில் போர்வோல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளூர், தெங்கம்புதூர் பகுதிக்கு வளர்ச்சி பணிகளுக்கென ரூ6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் குடிநீர் திட்டத்திற்கு முன்னுரிமைஅளித்து பணியை செய்ய வேண்டும்.
பார்வதிபுரம் பாலத்தின் அருகே குப்பைகள் கொட்டப் படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அதை சரி செய்ய வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் சாலை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.பணிகள் நடை பெறும் போது அந்த வேலை களை கண்காணிக்க ஒர்க் இன்ஸ்பெக்டரை கொண்டு கண்காணித்தால் அந்த சாலைகள் தரமானதாக இருக்கும்.
நாகர்கோவில் நகரில் தனியார் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன் பீச் ரோடு சந்திப்பில் உள்ள சிமெண்ட் தடுப்பு கற்களை மாற்ற உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும். புதிய கட்டிடங்களுக்கான வரி விதிப்பை முறையாக அமல்படுத்த வேண்டும். காலி மனைகளுக்கும் வரிகள் விதிக்கப்பட்டு வருகிறது
பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோட்டார் போலீஸ் நிலையம் முதல் பீச் ரோடு வரை உள்ள சாலையிலும் செட்டிகுளம் முதல் சவேரியார் ஆலய பகுதியுள்ள இடங்களிலும் ஏற்கனவே சாலை விரி வாக்கத்திற்காக கடைகள் இடிக்கப்பட்டு உள்ளது.
ஒரு சில கடைகள் இன்னும் இடிக்கப்படாமல் உள்ளது. அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதுடன் நடைபாதை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டிவி.டி. காலனி பூச்சாத்தான்குளம் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை வேண்டும் என்று கவுன்சி லர்கள் தெரிவித்தனர்.
இதற்கு மேயர் மகேஷ் பதில் அளித்து பேசினார்.அப்போது அவர் கூறிய தாவது:-
புத்தன் அணை முக்கடல் அணை தண்ணீரை ஆளூர், தெங்கம்புதூர் பகுதிகளுக்கும் கொண்டு செல்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். ஏற்கனவே நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சாலை சீரமைப்பதற்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் போடப்பட்டுள்ளது. அந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். மண் சாலைகளை பராமரிக்க ரூ.10கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த பணிகளுக்கும் விரைவில் டெண்டர் பிறப் பிக்கப்படும். சாலை பராம ரிப்பு என்று தமிழகத்திலேயே அதிக நிதியை நாகர்கோவில் மாநக ராட்சிக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இந்த பணிகள் அனைத்தும் நடைபெறும் போது 52 வார்டுகளும் தன்னிறைவு பெற்ற வார்டுகளாக மாற்றப்படும்.திருமண மண்டபங்கள் மற்றும் பள்ளிகளினால் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்படுவது உண்மைதான்.
இது தொடர்பாக அதிகா ரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார் கள். பீச் ரோடு- செட்டி குளம் பகுதியில் சாலையை விரி வாக்கம் செய்வது தொடர்பாக ஆலோ சனை மேற்கொண்டு வருகிறோம். வரி வசூலை பொருத்தமட்டில் அரசு என்ன நிர்ணயம் செய்துள்ளது அதன் அடிப்படையில் தான் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் திட்ட பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் குறித்து ஏற்கனவே அதிகாரிகளுடன் ஆலோ சனை மேற்கொண்டுள் ளோம். மார்ச் 31-ந் தேதிக்குள் முடிப்பதாக தெரிவித்துள்ளார்கள். குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அனைத்து நடவ டிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்