search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவியல் திறன் போட்டி"

    • ஐதராபாத் ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற போட்டியில் கமலாவதி பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
    • மாணவி அனன்யா,மாணவர்கள் கார்த்தி, அஜெய்கார்த்திக் ஆகியோர் ரோபாட்டிக்ஸ் போட்டியில் சான்றிதழ்களை பெற்றனர்.

    ஆறுமுகநேரி:

    இந்திய தொழில் நுட்பக் கழகம் சார்பில் தேசிய அளவிலான தொழில் முனைவோர் சாம்பியன்ஷிப் போட்டி ஐதராபாத் ஐ.ஐ.டி.யில் 2 நாட்கள் நடைபெற்றது. தொழில் முனைவோர் சாம்பியன்ஷிப் மற்றும் ரோபாட்டிக்ஸ் என இரு பிரிவுகளாக இந்த போட்டி நடந்தது.இதில் சாகுபுரம் கமலாவதி பள்ளியின் சார்பில் 7 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    தொழில் முனைவோர் சாம்பியன்ஷிப் போட்டியில் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனிஷ் சங்கர், குஷ்வந்த், 8-ம் வகுப்பு மாணவர்கள் கார்த்திக், சிவ சந்தோஷ் ஆகியோர் சிறந்த வடிவமைப்பாளர்க்கான விருதை பெற்றனர். 7-ம் வகுப்பு மாணவி அனன்யா, 5-ம் வகுப்பு மாணவர் கார்த்தி, 4-ம் வகுப்பு மாணவர் அஜெய்கார்த்திக் ஆகியோர் ரோபாட்டிக்ஸ் போட்டியில் சான்றிதழ்களை பெற்றனர்.

    தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த அடல் டிங்கரிங்க் ஆய்வக ஆசிரியை சேர்மசத்தியசிலி ஆகியோரை பள்ளியின் அறங்காவலர்களான டி.சி.டபிள்யூ.நிறுவன மூத்த செயல் உதவித் தலைவர் சீனிவாசன், மூத்த பொது மேலாளர் ராமச்சந்திரன், பள்ளி முதல்வர் அனுராதா, மாணவர்களின் மனநல ஆலோசகர் கணேஷ். தலைமை ஆசிரியர்கள் ஸ்டீபன் பாலாசீர், சுப்புரத்தினா, அட்மினிஸ்ட்ரேட்டர் மதன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

    ×