search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய் மீது புகார்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயில் அறையில் அதிகாரியின் காலியான சாப்பாட்டு பாத்திரமும், அதனை சாப்பிட்டதாக கூறப்பட்ட நாயின் புகைப்படமும் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது.
    • தற்போது வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள ஜெயில் அதிகாரி மதிய நேரம் தனது அறையில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார்.

    அப்போது அறைக்கு வெளியே போலீஸ் மோப்ப நாய் நின்று கொண்டிருந்தது. அதிகாரி சாப்பிட்டு கொண்டிருந்த போது ஜெயிலில் இருந்த ஒருவர் உதவி கேட்டு வந்தார்.

    அவருக்கு உதவுவதற்காக அதிகாரி, சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு வெளியே சென்றார்.

    அதிகாரி திரும்பி வந்து பார்த்த போது அறையில் இருந்த சாப்பாட்டு பாத்திரம் காலியாக இருந்தது. அதில் இருந்த சாப்பாடு முழுமையாக காலி செய்யப்பட்டு இருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரி, அறைக்கு வெளியே நின்ற போலீஸ் நாயை பார்த்தார். அதன்மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் அவர், தனது மதிய உணவை போலீஸ் நாய் தின்று விட்டதாக புகார் கூறினார். மேலும் இதுபற்றி விசாரிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் ஜெயில் அறையில் அதிகாரியின் காலியான சாப்பாட்டு பாத்திரமும், அதனை சாப்பிட்டதாக கூறப்பட்ட நாயின் புகைப்படமும் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. தற்போது இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×