search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்சர்"

    • அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ரஷித்கான் அடித்த சிக்சர் வைரலாகி வருகிறது.
    • அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20-யில் ஆப்கானிஸ்தான் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி முகமது நபி மற்றும் ரஷித் கான் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக முகமது நபி 59 ரன்களையும், ரஷித் கான் 25 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி ஆண்ட்ரு பால்பிர்னி 45 ரன்களையும், கரேத் டெலானி 39 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றிக்காக போராடினர். ஆனாலும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் 2-வது டி20 போட்டியின் போது ரஷித் கான் அடித்த சிக்சர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி ஆட்டத்தின் 18-வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ரஷித் கான் நோ லுக்கிங் ஷாட் மூலம் பந்தை சிக்சருக்கு விளாசினார். இது ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

    • 28 ஆண்டு கால வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார்.
    • 2019-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா 27 சிக்சர் அடித்திருந்தது.

    இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் 12 சிக்சருடன் 214 ரன்கள் குவித்தார். 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையை பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் தன்னகத்தே கொண்டுள்ளார். அவர் 1996-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 12 சிக்சர் அடித்திருந்தார். அந்த 28 ஆண்டு கால சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார்.

    இரு இன்னிங்சையும் சேர்த்து இந்தியா ராஜ்கோட் டெஸ்டில் மொத்தம் 28 சிக்சர்களை நொறுக்கியது. ஒரு டெஸ்டில் அதிக சிக்சர் அடித்த அணி என்ற தங்களது உலக சாதனையை இந்தியா தற்போது மாற்றி அமைத்துள்ளது. 2019-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா 27 சிக்சர் அடித்திருந்தது.

    3 டெஸ்ட் முடிந்துள்ள நிலையில் இந்த தொடரில் இந்தியா இதுவரை 48 சிக்சர் அடித்துள்ளது. ஒரு தொடரில் அணி ஒன்றின் அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையாகவும் இது பதிவானது. ஏற்கனவே 2019-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 47 சிக்சர் அடித்திருந்த இந்தியா, இப்போது அதை கடந்துள்ளது.

    • 2021-ம் ஆண்டு 238 பந்துகள் விளையாடிய வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் இருந்தது.
    • 2021-ம் ஆண்டு இலங்கை மற்றும் இந்தியா அணிகள் 207 பந்துகள் வரை விளையாடி ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனையடுத்து ஆடிய இந்திய அணி கடைசி ஓவரின் 5-வது பந்தில்தான் வெற்றி பெற்றது. மைதானம் குறித்து இரு அணி கேப்டன்களும் அதிருப்தியை தெரிவித்தனர். இந்த வெற்றி மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்று சமன் செய்துள்ளது.

    இந்த போட்டியில் இரு அணிகளும் 8 பவுண்டரி மட்டுமே அடித்துள்ளது. ஆனால், ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. இதன் மூலமாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 239 பந்துகள் வரை விளையாடி ஒரு சிக்சர் கூட அடிக்காத அணிகள் என்ற சாதனையை படைத்துள்ளன.

    டி20 கிரிக்கெட்டில் இந்தியா -நியூசிலாந்து 239 பந்துகள் சந்தித்து ஒரு சிக்சர்கள் கூட அடிக்காத அணிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

    ஒரு சிக்சர்கள் கூட அடிக்காத அணிகள் மற்றும் மைதானம் பின்வருமாறு:-

    2023 - 239 பந்துகள் - இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் - லக்னோ ஒரு சிக்சர் கூட இல்லை.

    2021 - 238 பந்துகள் - வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் - மிர்பூர் - ஒரு சிக்சர் கூட இல்லை.

    2010 - 223 பந்துகள் - இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் - கார்டிஃப் - ஒரு சிக்சர் கூட இல்லை.

    2021 - 207 பந்துகள் - இலங்கை மற்றும் இந்தியா அணிகள் - கொழும்பு - ஒரு சிக்சர் கூட இல்லை.

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்க இருக்கிறது. 

    ×