என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜேசன் சஞ்சய்"

    • நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் திரைப்படத் தயாரிப்பில் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
    • ஜேசன் சஞ்சய் ஒரு குறும்படத்தை இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் திரைப்படத் தயாரிப்பில் படிப்பை மேற்கொண்டு வருகிறார். நடிகர் விஜய் 2022 இல் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சஞ்சய் திரைப்படத் துறையில் நுழைய விரும்புவதாகவும், ஏற்கனவே தென்னிந்தியத் திரைப்படத் துறையின் சிறந்த இயக்குனர்களிடமிருந்து பல பயிற்சிகளை பெற்று வருவதாகவும் விஜய் தெரிவித்து இருந்தார்.

     

    ஜேசன் சஞ்சய்

    ஜேசன் சஞ்சய்


    தற்போது ஜேசன் சஞ்சய் குறும்பட இயக்குநராக மாறியுள்ளதாகவும், ஜேசன் சஞ்சய் ஒரு குறும்படத்தை எடுக்கும் வீடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் ஜேசன் விஜய் தனது தாத்தா எஸ்ஏ சந்திரசேகரைப் போலவே ஒரு படம் இயக்கத்தில் ஆர்வம் உள்ளதாகவும் அவரை போன்று புகழ்பெற்ற இயக்குனராக வருவார் என்றும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் விஜய் சேதுபதியை சஞ்சய் மிகவும் விரும்புவதாகவும், அவரை ஒரு திரைப்படத்தில் இயக்கதிட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    ஜேசன் சஞ்சய் - விஜய்

    ஜேசன் சஞ்சய் - விஜய்

    விஜய்யின் வேட்டைக்காரன் திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து ஜேசன் சஞ்சய் நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்.
    • இவர் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

    நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சஞ்சய்க்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதை அறிந்த விஜய், அது தொடர்பாக படிப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைத்தார். இதையடுத்து ஜேசன் சஞ்சய் விரைவில் படம் இயக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.


    இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். அதாவது, சஞ்சய் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • 'லைகா புரொடக்சன்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாக உள்ளார்
    • லைகாவில் வாய்ப்பு கிடைத்து உள்ளது பற்றி சினிமா உலகம் மிகுந்த வியப்பு அடைந்து உள்ளது.

    பிரபல நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார். மேலும் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் படிப்பை முடித்து உள்ளார். சினிமா தொடர்பான படிப்புகளும் அவர் படித்து உள்ளார்.சினிமா இயக்குவதில் ஆர்வமாக உள்ளார்.

    இதை யொட்டி 'லைகா புரொடக்சன்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாக உள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் அந்த நிறுவனத்துடன் அவர் கையெழுத்திட்டு உள்ளார்.




    லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் 2.0, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து உள்ளது. மேலும் லைகா தயாரிப்பில் கத்தி படத்தில் விஜய் நடித்து உள்ளார்.

    மேலும் அதுபோல விஜய் மகனுக்கும்லைகாவில் வாய்ப்பு கிடைத்து உள்ளது பற்றி சினிமா உலகம் மிகுந்த வியப்பு அடைந்து உள்ளது.

    இந்தப்படம் 'கிரிக்கெட்' மையமாக கொண்ட கதையாகும். அது தொடர்பான 'ஸ்க்ரிப்ட்' உருவாக்கும் பணியில் சஞ்சய் தற்போது தீவிரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடந்தது.
    • அதைத் தொடர்ந்து விழாவில் ஷங்கர் மற்றும் குடும்பத்தினர் சிறப்பு போட்டோ சூட் நடத்தியுள்ளனர்.

    பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடந்தது. விழாவில் இந்திய திரை உலக பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவையொட்டி நடந்த இசை நிகழ்ச்சியில் பிரபல இந்தி நடிகரும் தீபிகா படுகோனே கணவருமான ரன்வீர் சிங், இயக்குனர் அட்லி, ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் மற்றும் மகன் ஆகியோர் குத்து நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். அவர்கள் ஆடிய நடனத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் உள்ள பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் விழாவில் கலந்துக் கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து விழாவில் ஷங்கர் மற்றும் குடும்பத்தினர் சிறப்பு போட்டோ சூட் நடத்தியுள்ளனர். இந்தப் புகைப்படங்களை அதிதி ஷங்கர் நேற்று தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். அதில் ஒரு புகைப்படத்தில் நடிகர் விஜய் மகன் சஞ்சய்யும் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் சஞ்சய் இயக்கும் படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லைகா புரொடக்சன்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக ஜேசன் சஞ்சய் அறிமுகம் ஆகப்போகிறார்
    • ஜேசன் சஞ்சய் இயக்கும் இப்படத்திற்கு யார் கதாநாயகனாக நடிக்கவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது.

    பிரபல நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். தற்போது GOAT படத்தில் நடித்து மக்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் படிப்பை முடித்து உள்ளார். சினிமா தொடர்பான படிப்புகளும் அவர் படித்து உள்ளார். சினிமா இயக்குவதில் ஆர்வமாக உள்ளார்.

    இதை யொட்டி 'லைகா புரொடக்சன்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக ஜேசன் சஞ்சய் அறிமுகம் ஆகப்போகிறார் என செய்தி சில மாதங்களுக்கு முன் லைகா நிறுவனம் அறிவித்து இருந்தது.

    லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் 2.0, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து உள்ளது. மேலும் லைகா தயாரிப்பில் கத்தி படத்தில் விஜய் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் இப்படத்திற்கு யார் கதாநாயகனாக நடிக்கவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. இவர் நடிக்க போகிறார் , அவர் நடிக்க போகிறார் என் வதந்திகள் பரவி வந்த நிலையில் இப்பொழுது அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

     

    ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் சுதீப் கிஷன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சுதீப் கிஷன் சமீபத்தில் வெளியான ராயன் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தை நடிகர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளார்.
    • இத்திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தை குறித்த அப்டேட் நீண்ட காலமாக வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் படத்தின் டீசரை யாரும் எதிர்ப்பார்த்திராத போது முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் படக்குழு வெளியிட்டது.

    டீசரின் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை குறித்த தகவல் தற்பொழுது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    இப்படத்தை நடிகர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ளார். படத்தின் நாயகனாக சுதீப் கிஷன் நடிக்கவுள்ளார். இதுக்குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பணம், கோர்ட் ரூம், வங்கி, போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படத்தின் இசையை தமன் இசையமைக்கவுள்ளார்.

    படத்தொகுப்பை பிரவீன் கே.எல் மேற்கொள்ளவுள்ளார். இதன் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சந்தீப் கிஷன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.
    • படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் மகிழ்வுடன் நேற்று வெளியிட்டது.

    நல்ல கதையம்சம் கொண்ட படங்களை பிரம்மாண்டமாகத் தயாரிப்பதில் பெயர் பெற்ற லைகா புரொடக்ஷன்ஸ் புதிய திறமைகளை ஊக்குவிப்பதன் மூலம் திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம் ஊடகங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் மகிழ்வுடன் நேற்று வெளியிட்டது.

    லைகா புரொடக்ஷன்ஸ் ஜிகேஎம் தமிழ் குமரன் கூறும்போது, "நல்ல கதைகளை எங்களின் தயாரிப்பு நிறுவனம் எப்பொழுதும் ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், ஜேசன் சஞ்சய் கதை சொன்னபோது சுவாரஸ்யமாகவும் புதிதாகவும் இருந்தது. குறிப்பாக, அந்தக் கதையில் பான் இந்தியா படத்திற்கான களம் இருப்பதை உணர்ந்தோம். 'நீங்கள் இழந்ததை அதே இடத்தில் தேடுங்கள்' என்ற மையக்கருவை சுற்றிதான் படம் நகரும். தனது திறமையான நடிப்பால் சந்தீப் கிஷன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்" என்றார்.

    இப்படத்தை பற்றி நடிகர் சந்தீப் கிஷன் கூறும்பொழுது " நான் ராயன் திரைப்படம் நடிப்பதற்கு முன்பே. நானும் ஜேசன் சஞ்சயும் சந்தித்தோம். இப்படத்தின் கதையை இடைவிடாமல் 50 நிமிடத்திற்கு என்னிடம் கூறினார். அவர் இந்த கதைக்காக போட்ட மெனெக்கெடல் மற்றும் உழைப்பை பார்க்கும் போது எனக்கு பிரமிப்பாக இருந்தது. இப்படம் ஒரு ஆக்ஷன் மற்றும் ஃபன்னான திரைப்படமாக இருக்கும். இத்திரைப்படம் ஒரு பான் இந்தியன் திரைப்படமாக உருவாகவுள்ளது. ஜேசனின் முதல் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாகவுள்ளது." என கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • சிறப்பான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது.
    • படத்தின் கதையை அவர் என்னிடம் கூறினார்.

    தமிழ் திரையுலன் முன்னணி நடிகர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். தமிழில் பல்வேறு படங்களில் நடித்த சந்தீப் கிஷன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

    சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் தமன், ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, "எனக்கு இப்போதும் அதிர்ச்சியாகவே உள்ளது. பொதுவாக பெரிய ஹீரோக்களின் மகன்கள் நடிக்கவே விரும்புவர். இசையமைப்பாளர் குழந்தைகள் இசையமைக்க விரும்புவர். ஆனால் இவர் படம் இயக்க விரும்புகிறார். அப்படியெனில் அவர் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும்?"

    "படத்தின் கதையை அவர் என்னிடம் கூறினார். கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அந்தப் படத்தில் நடிக்க பெரிய ஹீரோக்களும் முன்வந்திருக்கக்கூடும். படத்தின் கதையும் அப்படித் தான் இருக்கும். ஆனால், அவர் சந்தீப் கிஷன் தான் வேண்டும். அவர் தான் கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று உறுதியாக கூறினார்."

    "தயாரிப்பு நிறுவனம், அவர்கள் செய்த முதல் மியூசிக் க்ளிம்ப்ஸ் சிறப்பாக வந்தது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும். அவரிடம், தான் நடிகர் விஜய்யின் மகன் என்று எப்போதும் வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. அவர் மிகவும் இயல்பாகவும், தன்மையாகவும் இருக்கிறார். அவருடன் பணியாற்றுவது அருமையான அனுபவம். அவர் தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்கிறார்."

    "ஜேசன் சஞ்சய் மிகப்பெரிய உச்சிக்கு செல்வார். அவர் படத்தில் என் அனுபவம் அனைத்தையும் பயன்படுத்துவேன். அவருக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது," என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார்.
    • இசையை எஸ்.தமன் மேற்கொள்கிறார்.

    நல்ல கதையம்சம் கொண்ட படங்களை பிரம்மாண்டமாகத் தயாரிப்பதில் பெயர் பெற்ற லைகா புரொடக்ஷன்ஸ் புதிய திறமைகளை ஊக்குவிப்பதன் மூலம் திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. லைகா தயாரிப்பில் நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம் ஊடகங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் மகிழ்வுடன் நேற்று வெளியிட்டது.

    இப்படத்தின் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். இசையை எஸ்.தமன் மேற்கொள்கிறார். ஒரு பான் இந்தியன் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. ஆனால் திரைப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து வேற் எந்த ஒரு தக்வலும் வெளிவராததால் லைக்கா நிறுவனம் இப்படத்தை கைவிட்டுவிட்டது என்ற செய்திகள் இணையத்தில் பரவின.

    ஆனால் இதுக்குறித்து நமக்கு கிடைத்த தகவலின்படி லைக்கா நிறுவனம் ஜேசன் சஞ்சய் திரைப்படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் சில பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும். அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் இலங்கையில்  நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர்களின் ஸ்கெடியுலை பொறுத்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி இல்ல திருமண விழா நடைபெறுகிறது.
    • இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சேலம்:

    சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி மனைவியின் சகோதரர் தனராஜ் மகன் சேதுநாயக்கின் திருமணம் நாளை மெய்யனூர் சூரமங்கலத்தில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இன்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


    மேலும், இந்த விழாவில் திரைப்பிரபலங்கள் விஜய் சேதுபதி மற்றும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    ஜி.கே.மணியின் மகனான தமிழ் குமரன் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×