என் மலர்
தமிழ்நாடு

X
ஜி.கே.மணி இல்ல திருமண விழா: முதல்வர் ஸ்டாலின், விஜய் சேதுபதி, விஜய் மகன் பங்கேற்பு
By
மாலை மலர்25 Feb 2025 7:04 PM IST

- சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி இல்ல திருமண விழா நடைபெறுகிறது.
- இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உள்பட பலர் பங்கேற்றனர்.
சேலம்:
சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி மனைவியின் சகோதரர் தனராஜ் மகன் சேதுநாயக்கின் திருமணம் நாளை மெய்யனூர் சூரமங்கலத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த விழாவில் திரைப்பிரபலங்கள் விஜய் சேதுபதி மற்றும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜி.கே.மணியின் மகனான தமிழ் குமரன் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X