என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி மாவட்ட குறைதீர் கூட்டம்"

    • திட்டமிட்டு புறக்கணிப்பதாக மீனவர்கள் குற்றச்சாட்டு
    • மீனவர்கள் கூட்டத்திற்கு அனைத்து அதிகாரிகளும் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, சப்- கலெக்டர் குணால் யாதவ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மீனவர்கள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகிறார்கள். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை ஆயிரக்க ணக்கான மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வரு கிறார்கள். இயற்கை சீற்றம் காரணமாக மீனவர்கள் திசை மாறி செல்லும் சம்பவங்கள், மேலும் கடலில் தத்தளிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.

    மீனவர்களை உடனடி யாக மீட்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.மீனவர்களை உடனடியாக மீட்க ஆம்புலன்ஸ் வசதி யுடன் கூடிய மீட்பு படகை துறைமுகங்களில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவளத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். பெரிய காடு பகுதி யில் தூண்டில் வளைவு 100 மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்க வேண்டும்.கன்னியா குமரியில் உள்ள உணவு விடுதிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் தான் ஏராளமான மீன வர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். மீனவர்களுக்கு கூடுத லாக மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழமணக்குடி பள்ளம் பகுதியில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்டு வருகி றார்கள்.

    எனவே அந்த நாட்டுப் படகுகளை சின்ன முட்டம் துறைமுகத்தின் கரை ஓரத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன வர்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும். குழித்துறை ெரயில் நிலையத்தில் ஏர்நாடு எக்ஸ்பிரஸ் ெரயில் ஏற்கனவே நின்று சென்றது. கொரோனாவுக்கு பிறகு அந்த ெரயில் அங்கு நிறுத்தப்படுவதில்லை. அந்த ெரயிலை மீண்டும் குழித்துறை நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில், சின்னமுட்டம் துறைமுக பகுதியில் நாட்டு படகுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பொதுப்பணி துறை மூலமாக அந்த பகுதியில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஓட்டல்களில் விலை பட்டியல் வைப்பது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வசதியுடன் மீட்பு படகு தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றனர்.

    மேலும் மீனவர்கள் கேள்விக்கு பதில் அளிக்க பல்வேறு துறை அதிகாரிகளும் கூட்டத்தி ற்கு வரவில்லை. இதைய டுத்து மீனவர்கள் தங்களது கூட்டத்தை அதிகாரிகள் வேண்டும் என்றே புறக்கணிப்ப தாகவும் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரி வித்தனர்.

    மீனவர்கள் கூட்டத்திற்கு அனைத்து அதிகாரிகளும் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்த னர்.

    ×