என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீப்தி சர்மா"
- டாப் 10-ல் இந்தியாவின் மந்தனா மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
- தீப்தி சர்மா 3 இடங்கள் முன்னேறி உள்ளார்.
பெங்களூரு:
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்தது. ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி சதமடித்து 117 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 37.4 ஓவரில் 122 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 143 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ஆஷா ஷோபனா 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் சதம் அடித்தனன் மூலம் ஐசிசி-யின் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். டாப் 10-ல் இந்தியாவின் மந்தனா மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
மேலும் தீப்தி சர்மா 3 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இலங்கையை சேர்ந்த அதப்பட்டுவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்தை சேர்ந்த ரூத் ஸ்கிவர்-ப்ரண்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
- சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021-ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.
- கடந்த வாரம் பிசிசியின் 2023-ம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதையும் தீப்தி சர்மா பெற்றார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீராங்கனையாக தீப்தி சர்மா உள்ளார். இவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இதனைதொரந்து 2014 -ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும், 2016 -ம் ஆண்டு டி20 போட்டிகளிலும் அறிமுகமானார். இவர், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மேலும் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் 225 ரன்கள் எடுத்து 2023 டிசம்பரில் ஐசிசியின் மாதாந்திர வீராங்கனை விருதை வென்றார். கடந்த வாரம் பிசிசியின் 2023-ம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதையும் தீப்தி சர்மா பெற்றார்.
இந்நிலையில் இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக உத்தரபிரதேச மாநில அரசு துணை காவல் கண்காணிப்பாளர் என்ற உயரிய பதவியை தீப்தி சர்மா-வுக்கு வழங்கியுள்ளது. இதற்கான பணி நியமன ஆணையை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவருக்கு வழங்கினார். மேலும் இவருக்கு, 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் விருது வழங்கப்பட்டது.
- இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
- இந்தியாவின் தீப்தி சர்மா இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
மும்பை:
பெண்கள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 104.3 ஓவரில் 428 ரன்களில் ஆல் அவுட்டானது. சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதமடித்து அசத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து சார்பில் லாரன் பெல், எக்லெஸ்டோன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 35.3 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார்.
இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டும், ஸ்நே ரானா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
298 ரன்கள் முன்னிலை வகித்த நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. இந்திய அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து சார்பில் சார்லி தீன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 479 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இதிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
இந்தியாவின் தீப்தி சர்மா 4 விக்கெட்டும், பூஜா 3 விக்கெட்டும், கெய்க்வாட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இங்கிலாந்து வீராங்கனையான நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் மட்டும் சிறப்பாக ஆடி அரை சதம் விளாசினார்.
- இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பெண்கள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 நாட்கள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 94 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்திருந்தது. இந்திய அணி தரப்பில் சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்து அசத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணியில் தீப்தி ஷர்மா 67 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ரேனுகா சிங் 1 ரன்னிலும், கயக்வாட் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இறுதியில் இந்திய அணி 104.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 428 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல், எக்லெஸ்டோன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி தடுமாறியது. இங்கிலாந்து வீராங்கனையான நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் மட்டும் சிறப்பாக ஆடி அரை சதம் விளாசினார். அடுத்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்தது.
Renuka ? Dunkley #INDvENG
— Visheshta Jotwani ?? (@visheshtaaa_j15) December 15, 2023
Enjoy this wicket. ???pic.twitter.com/NMC8zw1Ikm
இறுதியில் இங்கிலாந்து அணி 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 292 ரன்கள் பின்தங்கி உள்ளது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- இந்திய அணியின் மற்றொரு வீராங்கனையான ராஜேஸ்வரி 7 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார்.
- முதல் இடத்தில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் உள்ளார்.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் மகளிர் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா சார்பில் தீப்தி சர்மா அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் ஆடிய இந்திய அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் தீப்தி சர்மா அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகி விருதை தட்டிச் சென்றார்.
இந்நிலையில் மகளிர் டி20 போட்டியின் பந்து வீச்சாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் 732 புள்ளிகளுடன் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா 2-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான ராஜேஸ்வரி 7 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் உள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு இடம் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்