search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசாகப்பட்டினம்"

    • இன்ஸ்டாகிராம் மூலம் பணக்கார இளைஞர்களை குறிவைத்து பணம் பறித்துள்ளார்.
    • ஜாய் ஜமீமாவிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகாரளிக்க முன்வர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இளைஞர்களை குறிவைத்து ஹனி ட்ராப் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

    28 வயதான ஜாய் ஜமீமா என்ற பெண் இன்ஸ்டாகிராம் மூலம் பணக்கார இளைஞர்களை குறிவைத்து பணம் பறித்துள்ளார்.

    பணக்கார இளைஞர்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசி பழகி வீட்டுக்கு வரவைத்து போதை வஸ்து கொடுத்து, ஆடைகள் இன்றி புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட இளைஞர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்.

    வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் இப்பெண்ணை கைது செய்துள்ளனர்.கைதான ஜாய் ஜமீமாவிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகாரளிக்க முன்வர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

    • கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டார்.
    • வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அனக்கா பள்ளியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர்.

    இளம்பெண் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பம் தரித்தார். ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளதால் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள இளம் பெண்ணிற்கு விருப்பம் இல்லை.

    இதனால் மருந்து கடைக்கு சென்று கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டார். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் இளம்பெண்ணுக்கு பாதி அளவு கரு கலைந்தது.

    இதனால் கடந்த 3 வருடங்களாக இளம் பெண் வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் இளம் பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் ஆபரேஷன் செய்து இளம் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடை அகற்றினர்.

    தற்போது இளம் பெண் நலமுடன் இருப்பதாகவும் ஒரு வார சிகிச்சைக்கு பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • தீ விபத்து ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது .
    • விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

    விசாகப்பட்டினம் ரெயில் நிலையத்தில் நின்றிருந்த ரெயிலின் 3 ஏசி பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    B6, B7,M1 ஆகிய 3 பெட்டிகளில் மளமளவெனப் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து அணைத்தனர்.

    சத்தீஸ்கரின் கோர்பா நகரில் இருந்து விசாகப்பட்டினம் வந்திருந்த ரெயிலிலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு தீப்பிடித்ததால், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த தீ விபத்து விசாகப்பட்டினம் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது .

    • தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
    • தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி அரசு தொடர்ந்து போராடும்.

    ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ஆங்கில நாளேடு டெக்கன் கிரானிகிள் (Deccan Chronicle) நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மீது தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    "விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் இருந்து ஆந்திர பிரதேச மாநிலத்தின் கூட்டணி அரசு அந்தர்பல்டி அடிக்கும்," என்பது தொடர்பாக டெக்கன் கிரானிகிள் செய்தி வெளியிட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் அந்நிறுவன அலுவலகத்தை தாக்கி உள்ளனர்.

     


    அத்துமீறி அலுவலகத்திற்குள் புகுந்த கட்சியினர் அங்கிருந்த மேசை, இருக்கைகள் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கியதோடு அலுவலக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அலுவலகத்தின் சுற்றுச் சுவர் மீது ஏறிவர்கள், அலுவலகத்தின் பெயர் பலகைக்கும் தீ வைத்துள்ளனர்.

    டெக்கன் கிரானிகிள் வெளியிட்ட செய்தியில் உண்மையில்லை என்று கூறிய தெலுங்கு தேசம் கட்சியினர் விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிராக தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி அரசு தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தனர்.

    நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த செய்தியாளர்கள், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர்கள் வெளியிட்ட செய்தி உண்மைதான் என்றும், அதனை எத்தகைய பிரச்சினையாலும் எடுக்க முடியாது என்று தெரிவித்தனர். 

    • இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
    • முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் குவித்தது.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஜெய்ஸ்வாலின் அதிரடியால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் சேர்த்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் உணவு இடைவேளை விடப்பட்டது. இதனையடுத்து இரு அணி வீரர்களும் உணவு சாப்பிட சென்றனர். மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர் - ரசிகைகளும் உணவு மற்றும் குளிர்பானம் அருந்துவதற்கு சென்றனர்.

    ஆனால் இங்கிலாந்து ரசிகர் - ரசிகைகள் ஸ்டேடியத்துக்கு வெளியே சென்று அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்குள் புகுந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

    • இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
    • விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 11 வயதில், ஆந்திராவின் உள்நாட்டு (domestic) அணியுடன் பயிற்சி செய்யத் தொடங்கினார்.

    இந்தியா -இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ்.பாரத் ஆந்திர கிரிக்கெட் சங்கத்தால் கவுரவிக்கப்பட்டார்.

    அவர் தனது சொந்த ஊர் மைதானத்தில் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியதால் கௌரவிக்கப்பட்டுள்ளார். சொந்த ஊர் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மாநிலத்தின் இரண்டாவது கிரிக்கெட் வீரர் பரத் ஆவார்.

     

    விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 11 வயதில், ஆந்திராவின் உள்நாட்டு (domestic) அணியுடன் பயிற்சி செய்யத் தொடங்கினார். 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி நடந்தபோது, அந்த போட்டியில் கே.எஸ்.பாரத் பால் யாயாக (Ball boy) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவருக்கு முன்னர் இரு ஆந்திர வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர். அவர்கள் விஹாரி, எம்எஸ்ஏகே பிரசாத் ஆகியோர் ஆவர்.

    • கடற்கரை விமானங்கள் வானத்தில் வட்டமிட்டபடி குறுக்கும் நெடுக்கமாக சென்று சாகசத்தில் ஈடுபட்டனர்.
    • சாகச நிகழ்ச்சியில் போர் விமானங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

    திருப்பதி:

    கடற்படை தினத்தை முன்னிட்டு ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ராமகிருஷ்ணா கடற்கரையில் நேற்று முதல் முறையாக கடற்படை வீரர்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று மாலை 4 மணி அளவில் சூரியன் மறையும் பின்னணியில் கடற்கரை விமானங்கள் வானத்தில் வட்டமிட்டபடி குறுக்கும் நெடுக்கமாக சென்று சாகசத்தில் ஈடுபட்டனர்.

    சாகச நிகழ்ச்சியை கடற்கரை வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வீட்டின் மாடி மற்றும் பால்கனிகளில் இருந்து பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    ஹெலிகாப்டர்களில் ராணுவ வீரர்கள் தாழ்வாக பறந்து வந்து சாகசத்தில் ஈடுபட்ட நிகழ்ச்சியை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    ஏரோ பாட்டிக்ஸ் கமாண்டோ படை வீரர்கள் விமானத்தில் பறந்து வந்து ஸ்கை டைவிங் செய்தபடி விமானத்தில் இருந்து குதித்து பாராசூட் மூலம் கடற்கரை மணலில் இறங்கினர். இந்த சாகச நிகழ்ச்சியில் போர் விமானங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

    மேலும் போர்க்கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் கடற்கரை சாலையை நெருங்கி வந்து தீப்பிழம்பை கொட்டியது.

    கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் பொது மக்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

    மீண்டும் டிசம்பர் 2-ந்தேதி மற்றும் இறுதி சாகச நிகழ்ச்சி டிசம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது.
    • ஆந்திர சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்குகிறது.

    விஜயதசமி முதல் ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று அம்மாநில சட்டமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று ஆந்திர பிரதேச சட்டமன்ற கூட்டம் கூடியது.

    ஆந்திர பிரதேச மாநிலத்தின் மழைகால கூட்டத் தொடர் நாளை (செப்டம்பர் 21) துவங்க இருக்கும் நிலையில், இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில், புதிய தலைநகர் பற்றிய அறிவிப்பு வெளியானது. நவம்பர் 2-ம் தேதி துவங்கும் விஜயதசமி நாள் முதல் முதலமைச்சர் அலுவலகம் விசாகப்பட்டினத்திற்கு மாறுகிறது.

    இதே போன்று மற்ற அமைச்சர்களும் விசாகப்பட்டினத்தில் இருந்து பணியாற்ற தயாராக வேண்டும். ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியே பிரிந்ததில் இருந்து, ஆந்திரா மாநில தலைநகராக அமராவதி நகரம் செயல்பட்டு வருகிறது. இம்மாநிலத்தின் மிகப் பெரிய நகரம் விசாகப்பட்டினம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார்.
    • 10,000 மேற்பட்ட விவசாயிகள் அமராவதியில் தலைமை செயலகம் அறிவிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் நடைபயணம் சென்றனர்.

    திருப்பதி:

    கடந்த தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஆந்திராவை, ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.

    அப்போது ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் தலைநகரமாக அமராவதியை அறிவித்து விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தி தலைமைச் செயலகம் கட்டுப்பணி நடைபெற்று வந்தது.

    அதன் பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார்.

    அவர் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவில் நிர்வாக வசதிக்காக 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு தெலுங்கு தேசம், பாஜக, காங்கிரஸ், ஜனசேனா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அமராவதியில் தலைமைச் செயலகம் கட்ட நிலம் கொடுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் 10,000 மேற்பட்ட விவசாயிகள் அமராவதியில் தலைமை செயலகம் அறிவிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் நடைபயணம் சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    வரும் மார்ச் மாதம் 3 அல்லது 4 தேதியில் ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    அவரது அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில பொறுப்பாளர் அச்சம் நாயுடு கூறுகையில்:-

    கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆந்திராவில் ஒரே தலைநகரம் அமராவதி என தேர்தல் நேரத்தில் பேசி வந்த ஜெகன்மோகன் ரெட்டி தற்போது விசாகப்பட்டினம் தலைநகரம் என அறிவித்து நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தி மாநிலத்தை பிரிக்க பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.

    ×