search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரகாட்டூர்"

    • தேர் திருவிழாவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் 15 நாட்கள் விரதம் இருந்து குண்டம் இருந்து நேர்த்தி க்கடன் செலுத்துவது வழக்கம்.
    • தொடர்ந்து கரும்பு, விறகுகள் கொண்டு குண்டம் திறப்பு விழா செய்யப்பட்டு குண்டத்திற்கு தீ மூட்டப்பட்டது.

    கோபி

    கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கோரக்காட்டூர் கரிய காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா வருடம் தோறும் தை மாதம் முதல் வாரம் தொடங்கும்.

    இந்த குண்டம் தேர் திருவிழாவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் 15 நாட்கள் விரதம் இருந்து குண்டம் இருந்து நேர்த்தி க்கடன் செலுத்துவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டிற்கான குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது. தொடர்ந்து தீர்த்தம் கொண்டு வருதல், முதல் கால பூஜை, காப்பு கட்டுதல், கொடியேற்றம், சந்தன காப்பு, சுமங்கலி யாக பூஜை, உள்ளிட்டு பல்வேறு வழிபாடுகள் செய்யப்பட்டது.

    பின்னர் நேற்று இரவு மாடு கரும்பு கொண்டு வருதல், மாவிளக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கரும்பு, விறகுகள் கொண்டு குண்டம் திறப்பு விழா செய்யப்பட்டு குண்டத்திற்கு தீ மூட்டப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை யொட்டி அதிகாலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின் குதிரையிடம் வாக்கு கேட்ட பின்பு திருகோடி ஏற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து தலைமை பூசாரி சதீஷ்குமார் குண்டத்திற்கு பூஜை செய்து இறங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோரக்காட்டூர், கடுக்காயம்பாளையம், கொளத்துப்பாளையம், புளியகாட்டூர், ஐய்யம்புதூர், வெள்ளாங்கோவில் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கையில் வேப்பிலையுடனும், அக்கினி சட்டியுடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    ×