என் மலர்
நீங்கள் தேடியது "ரூபி மெட்ரிக் பள்ளி"
- ரூபி மெட்ரிக் பள்ளியில் வருகிற 4-ந்தேதி விளையாட்டு விழா நடக்கிறது.
- மதுரா கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.
மதுரை
மதுரை பழங்காநத்தத்தில் ரூபி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி மற்றும் மாடக்குளத்தில் ரூபி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளிகளின் விளையாட்டு விழா வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) மதுரா கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. விழாவில் திருமங்கலம் டி.எஸ்.பி. வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவி களுக்கு பரிசு வழங்கி டி.எஸ்.பி. பேசுகிறார். இந்த விழாவில் பல்வேறு துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்று கின்றனர்.
விளையாட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி சாந்தா தேவி, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.