search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர் வலை"

    • மீனவர்கள் வலையில் சிக்கிய டிரோனை மீட்டு காசி மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • மீனவர்கள் வலையில் டிரோன் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராயபுரம்:

    திருவொற்றியூர் அப்பர் நகரைச் சேர்ந்தவர் அன்பு. மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த மேலும் 3 மீனவர்களுடன் பைபர் படகு மூலம் திருவொற்றியூர் கடல் பகுதியில் வலை வீசி நண்டு பிடித்தார். அப்போது அவர்களது வலையில் டிரோன் ஒன்று சிக்கியது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் வலையில் சிக்கிய டிரோனை மீட்டு காசி மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் டிரோனை சோதனை செய்த போது, அது 2 அடி நீளம், 1 அடி உயரமாக இருந்தது. 6 இறக்கைகளும் காணப்பட்டன. மேலும் அதில் சாகர் பாதுகாப்பு தொழில்நுட்பம் என்று எழுதப்பட்டிருந்தது. இது கடலோர காவல் படைக்கு இன்னும் சொந்தமானது என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த டிரோன் குறித்து போலீசார் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த டிரோனை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணிக்கு பறக்க விட்டபோது தொழில் நுட்ப கோளாறால் கடலில் விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    இது பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மீனவர்கள் வலையில் டிரோன் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற வினோத் என்பவரின் விசைப்படகு நேற்று கரை திரும்பியது.
    • அபூர்வ வகையான வெள்ளை திருக்கை மீன் ஒன்று இருந்தது. இந்த மீன் சுமார் 25 கிலோ எடை இருந்தது.

    கடலூர்:

    கடலூர் துறை முகத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீன்பிடிப்ப தற்காக மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். 


    இதில் தினந்தோறும் வஞ்சிரம், வவ்வால், பன்னி சாத்தான், சங்கரா மீன், திருக்கை மீன் உள்ளிட்ட மீன்கள் பிடித்து வருகின்றனர். திருக்கை மீன்களில் புள்ளி திருக்கை, செந்திருக்கை, கொம்பன் திருக்கை உள்ளிட்ட 3 வகைகள் உள்ளன.

    இந்நிலையில் கடலூர் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற வினோத் என்பவரின் விசைப்படகு நேற்று கரை திரும்பியது. அப்போது வலையில் இருந்த மீன்களை பார்த்தபோது, அதில் மிகவும் அபூர்வ வகையான வெள்ளை திருக்கை மீன் ஒன்று இருந்தது. இந்த மீன் சுமார் 25 கிலோ எடை இருந்தது.

    இது குறித்து அந்த பகுதி மீனவர்கள் கூறுகையில், இதுவரை 3 வகை திருக்கை மீன்களை மட்டுமே பார்த்திருப்பதாகவும் வெள்ளை திருக்கை மீனை தங்கள் வாழ்நாளில் முதல் முறையாக பார்ப்பதாகவும் கூறினர். இதனால் இது ஒரு அபூர்வ வகை மீன் என தெரிவித்தார்.

    ×