search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேருந்துகள்"

    • பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழா நடைபெற்றது.
    • பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.7.2024) தருமபுரி, பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மகளிர் விடியல் பயணத் திட்டப் பயன்பாட்டிற்காக 20 புதிய நகரப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
    • சென்னை, பெங்களூரிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

    சென்னை:

    ஆயுத பூஜை பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சென்னை, பெங்களூரிலிருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    வரும் 23ம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திங்கள்கிழமை ஆகும். ஏற்கெனவே சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் சேர்த்து விடுமுறை நாளாக உள்ளது. அதுபோல விஜயதசமி தினமும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதும். இதனால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி சென்னை, பெங்களூரிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தினசரி சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2100 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ஆயுத பூஜையையொட்டி கூடுதலாக 2,265 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பொதுமக்கள் கூட்டநெரிசலை தவிர்க்க சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

    • பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • இராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    மகாளய அமாவாசையை முன்னிட்டு 13-ம் தேதி அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரிலிருந்தும் பொது மக்கள் மகாளய அமாவாசை அன்று புண்ணியஸ்தலமான இராமேஸ்வரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இதன்படி வருகின்ற 14-ம் தேதி மகாளய அமாவாசை வருவதால் இராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    அதன் அடிப்படையில் வருகின்ற 13-ம் தேதி சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து இராமேஸ்வரத்திற்கும் மற்றும் 14-ம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து சென்னை ,சேலம்,கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    மேற்கூறிய இடங்களிருந்து www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது .

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை திட்டமிட்டு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    • புதிய பேருந்துகளை வாங்கவும், பழைய பேருந்துகளை பழுது பார்க்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
    • அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 200 பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் இயக்கும் மிகப் பழமையான பேருந்துகளுக்குப் பதில் 1000 புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோல் 500 பேருந்துகளை பழுது பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக போக்குவரத்துத்துறைக்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

    இந்த நிதியில், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 200 பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. விழுப்புரம் கோட்டத்தில் 190, கோவை கோட்டத்தில் 163, கும்பகோணம் கோட்டத்தில் 155 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட உள்ளன. மதுரை கோட்டத்தில் 163, திருநெல்வேலி கோட்டத்தில் 129 பேருந்துகளும் புதிதாக வாங்கப்பட உள்ளன. 

    • பவுர்ணமி மற்றும் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் தொடக்கப்பட்டுள்ளது.
    • சேலத்தி லிருந்து திருவண்ணாமலைக்கும் ஆகிய இடங்களில் நாளை முதல் வருகிற 6-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்படவுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சேலம் நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது:-

    பவுர்ணமி மற்றும் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் மூலமாக சேலத்திலிருந்து ஈரோடு, காங்கேயம் வழியாக பழனிக்கும், நாமக்கல்லில் இருந்து கரூர் வழியாக பழனிக்கும், சேலத்திலிருந்து காளிப்பட்டிக்கும், ராசிபுரத்தி லிருந்து காளிப்பட்டிக்கும், திருச்செங்கோட்டி லிருந்து காளிப்பட்டிக்கும், சங்ககிரியிலிருந்து காளிப்பட்டிக்கும், எடப்பாடி யிலிருந்து காளிப்பட்டிக்கும், எடப்பாடி யிலிருந்து பழனிக்கும், நாமக்கல்லில் இருந்து கபிலர்மலைக்கும், திருச்செங்கோட்டிலிருந்து கபிலர்மலைக்கும், வேலூரிலிருந்து கபிலர்மலைக்கும், சேலத்திலிருந்து வடலூ ருக்கும், சேலத்தி லிருந்து திருவண்ணாமலைக்கும் ஆகிய இடங்களில் நாளை முதல் வருகிற 6-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்படவுள்ளது. ஆகவே பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து பயணம் செய்திடும்படி கேட்டுக்கொள் ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×