என் மலர்
நீங்கள் தேடியது "கல்லூரியில் கருத்தரங்கு"
- பொறியாளர்களின் வாழ்க்கை திறன்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.
- முடிவில் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி சீனிவாசா பொறியியல் கல்லூரியில் "பொறியாளர்களின் வாழ்க்கை திறன்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சீனிவாசா கல்வி அறக்கட்ட ளையின் கவுரவத்தலைவர் பேராசிரியர் இளங்கோவன் மற்றும் அறக்கட்டளையின் தலைவர் ரேவதி இளங்கோவன் தலைமை தாங்கினர்.
விழாவில் கல்லூரியின் தலைவர் ரேவதி இளங்கோவன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி இயக்குநர் ரஞ்சித்குமார் முன்னிலை வகித்தார். துறை தலைவர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரியின் முதல்வர் டாக்டர் நந்தகோபால் மற்றும் நிர்வாக இயக்குனர் முருகன் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் பிரபு, எக்ஸ்செல் பொறியியல் கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர், முதலாம் ஆண்டு மாண வர்களுக்கு தன்னம்பிக்கை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.
முடிவில் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர்
மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்து
இருந்தனர்.
- தற்சார்பு இந்தியா 2047 என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
- நாட்டின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கவேண்டும் என்றார்.
ஓசூர்,
ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை சார்பில், தற்சார்பு இந்தியா 2047 என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
விழாவிற்கு, கல்லூரியின் முதல்வர் முத்துமணி முன்னிலை வகித்தார். வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் மஞ்சுநாத் வரவேற்றார்.
முத்துமணி பேசுகையில், மாணவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. அதற்கேற்றவாறு அவர்கள், தங்களை தயார் செய்துகொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கவேண்டும் என்றார்.
இந்த கருத்தரங்கில், மதுரை உற்பத்தி சபையின் செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு பேசுகையில், மேக் இன் இந்தியா திட்டத்தில் நமக்குத் தேவையான பொருட்களை 30 சதவீதத்திற்கும் மேல் உற்பத்தி செய்கின்றோம். சிலிக்கானுக்கு மாற்றாக இந்தியாவில் அதிகம் கிடைக்கக்கூடிய சோடியம் பயன்படுத்தத் திட்டமிட்டப்பட்டிருக்கிறது.
இதனால் இந்தியா, உற்பத்தியில் 2047-ம் ஆண்டுக்குள் தன்னிறைவு பெற்ற நாடாக மாறிவிடும். அதற்கு, மாணவர்கள் திறம்பட செயல்பட்டு நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் மேலும் நிகழ்ச்சியின்போது,
மதுரை உற்பத்தி சபையும், ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரி வணிக நிர்வாகவியல் துறையும் இணைந்து அதியமான் கல்வி அறக்கட்டளையின் ஆலோசகர் முத்துச்செழியன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. . இதன் மூலம் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கானக் கருத்தரங்குகள் தொடர்ச்சியாக நடைபெறும் என ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும், இந்தகருத்தரங்கில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில், பேராசிரியர் கோபி நன்றி கூறினார்.