என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருமணிமுத்தாறு"
- சேலம் செவ்வாய்ப்பேட்டை மீன்மார்க்கெட் அருகே திருமணிமுத்தாற்றில் 60 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதப்பதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. மூதாட்டி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு
சேலம்:
சேலம் செவ்வாய்ப்பேட்டை மீன்மார்க்கெட் அருகே திருமணிமுத்தாற்றில் 60 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதப்பதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு உடலை மீட்டனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை.
மூதாட்டி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமணிமுத்தாறு தூய்மை காக்க மக்கள் இயக்கம் சார்பில் நீராதாரம் பேண ஒரு லட்சம் கையெழுத்து பெறும் திருப்பணி நடைபெற்று வருகிறது.
- சேலம் செர்ரி ரோடு மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் உள்ள சாந்தாஸ்ரமத்தில் நடைபெற்றது.
சேலம்:
சேலம் திருமணிமுத்தாறு தூய்மை காக்க மக்கள் இயக்கம் சார்பில் நீராதாரம் பேண ஒரு லட்சம் கையெழுத்து பெறும் திருப்பணி நடைபெற்று வருகிறது.
ஆலோசனை கூட்டம்
இது தொடர்பான ஆலோ
சனை கூட்டம் மற்றும் 1000 கையெழுத்து வாங்கி யவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி சேலம் செர்ரி ரோடு மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் உள்ள சாந்தாஸ்ரமத்தில் நடைபெற்றது.
சேலம் திருமணிமுத்தாறு தூய்மை காக்க மக்கள் இயக்க தலைவர் வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்முருகேசபூபதி, தெய்வீக தமிழ் சங்க தலைவர் பா.ராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சிக்கு அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறு வனர் சுவாமி ராமானந்த மகராஜ், பொதுச்செயலாளர் ஆத்மானந்த மகராஜ், ராசி புரம் வித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள் கே.குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ சனாதன வித்யா பீடம் மற்ரும் திருவெம்பாவை பெருவிழா கழக செயலாளர் என்.சந்திரசேகர் வரவேற்றார்.
கவுரவிப்பு
தெய்வீக தமிழ் சங்க நிறுவனர் வீரபாரதி செம்முனி, கன்னங்குறிச்சி விவசாயிகள் சங்கம் கவிஞர் ஆறுமுகம் ஆகியோர் ஒருங்கி ணைத்தனர். நிகழ்ச்சியில் 1000 கையெழுத்துக்கள் பெற்ற வர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறுவனர் சுவாமி ராமானந்த மகராஜ் பேசுகையில், திரு மணிமுத்தாறின் புனிதத்தை காக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கான கையெழுத்து இயக்கத்தில் 90வயதை தாண்டிய பெண்மணி ஆர்வத்தோடு பங்கேற்று சிறப்பாக பணிசெய்வது ஆச்சரியமாக உள்ளது. மக்களிடம் தர்மசிந்தனை அழிந்து விடவில்லை என்றார்.
அடுத்த ஆண்டு புஷ்கரம்
கூட்டத்தில் சேலத்தில் திருமணிமுத்தாறு பாதுகாக்க ஒருலட்சம் கையெழுத்து விழிப்புணர்வு இயக்கத்தை தீவிரப்படுத்துவது, 2024-ம் ஆண்டு திருமணிமுத்தாறு புஷ்கரம் அம்மன் சிலை ஏற்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் பொருளாளர் ஸ்ரீதர் நரசிம்மன் நன்றி கூறினார்.
- வருகிற 19-ந்தேதி அகில பாரத சன்னியாசிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக திருமணமுத்தாற்றில் ஆரத்தி விழா.
- நதிக உற்பத்தியாகும் இடத்தில் இருந்து காவிரியில் கலக்கும் இடம்வரை பாதயாத்திரை செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலையின் தெற்கில் ஏற்காடு மலையில் பிறக்கிறது திருமணி முத்தாறு. இந்த நதி சேலம் நகரத்தில் நுழைந்து சேலம், நாமக்கல் மாவட்டம் வழியாக சுமார் 120 மைல்கள் ஓடி பரமத்தி வேலூர் அருகே நஞ்செய் இடையாறு என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது.
மிகவும் பழமையான, புனிதம் நிறைந்த இந்த நதி, மணிமுத்தா நதி, வீர மணிமுத்தாறு என்றெல்லாம் அழைக்கப்பட்டது. ஒருகாலத்தில் இந்த ஆற்றில் முத்து எடுக்கப்பட்டது. பிரசித்திப் பெற்ற செவ் வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக் கப்பட்டது என்பார்கள்.
அதன் நதிக்கரை எங்கும் ஏராளமான நந்தவனங்களும் அன்னதான சத்திரங்களும் இருந்தன. இன்றைக்கும்கூட அணைமேடு அருகில் ஒரு நந்தவனம் இருக்கிறது.
சேலம் ஸ்தல புராணத்தில் பாடப்பட்ட பாடல் ஒன்று 'சேலம் மணிமுத்தா நதியின் ஒரு திவலை நீர் உண்டால் உடல் பாதகங்கள் அகலும் பரம ஞானம் உண்டாகும்' என்கிறது.
திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் சுகவனேஸ்வரர் (சேலம்), கரபுரநாதர் (உத்தமசோழபுரம்), வீரட்டீஸ்வரர் (பில்லூர்), பீமேஸ்வரர் (மாவுரெட்டி), திருவேணீஸ்வரர் (நஞ்சை இடையாறு) ஆகிய ஐந்து திருத்தலங்களும் பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப்பட்டவை.
இந்த 5 கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம்.பஞ்ச காலத்தில் பீமேஸ்வரரை வழிபட்டால் நல்ல மழை பொழியும் என்பதும் நம்பிக்கை.
திருமணிமுத்தாற்றின் கரைகள் கனிம வளம் மிக்கவை. இன்றளவும் அங்கே அள்ள அள்ளக் குறையாமல் இரும்பு, மேக்னசைட், குரோமைட் வெட்டி எடுக்கப்படுகிறது. ஒருகாலத்தில் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது எனச் சொல்கிறாகள். தற்போது இந்த நதி சுருங்கி சாக்கடைகளால் புனிதம் கெட்டு காட்சியளிக்கிறது.
இந்த நதியின் புனிதத்தை காக்கவும், இழந்த அதன்பெருமைகளை மீட்டெடுக்கவும் ஆன்மீக அமைப்புகள் திரண்டுள்ளன. அதன் முதல் கட்டமாக வருகிற 19-ந்தேதி அகில பாரத சன்னியாசிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக திருமணமுத்தாற்றில் ஆரத்தி விழா நடத்தவும், நதிக உற்பத்தியாகும் இடத்தில் இருந்து காவிரியில் கலக்கும் இடம்வரை பாதயாத்திரை செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சேலத்தில் இன்று நடை பெற்றது. இதில் பல்வேறு சங்கங்கள், சமூக, ஆன்மீக அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் திருமணி முத்தாறு நதியின் புனிதம் காக்க தீர்மானிக்கப்பட்டது. நதி ஆரத்தி விழாவை பிரமாண்டமாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்