என் மலர்
நீங்கள் தேடியது "கூலித்தொழிலாளி சாவு"
- பாம்பு ஒன்று பழனிச்சாமியின் இடது காலில் கடித்தது.
- ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 53). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி வீட்டில் இருக்கும்போது திடீரென பாம்பு ஒன்று பழனிச்சாமியின் இடது காலில் கடித்தது.
இதையடுத்து பழனிச்சாமியின் உறவினர்கள் அவரை மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பழனிச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து பழனிச்சாமியின் மகன் நவீன் (23) மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.
- வீட்டின் அருகே உள்ள சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கே.ஜெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ராமன் (வயது29). கூலித்தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.
இந்த நிலையில் நேற்று மது குடித்துவிட்டு ராமன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த அவர், வண்டியை நிறுத்திவிட்டு தள்ளாடியபடி நடந்து சென்றார்.
அப்போது அவர் வீட்டின் அருகே உள்ள அவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி ராமன் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டிற்கு வண்டியில் வந்த மகனை காணவில்லை என்று பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிபார்த்தபோது, கிணற்றில் அவர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது அவர்கள் ராமனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து பழனி பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ராமனின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.