search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துருக்கி நிலநடுக்கம்"

    • நிலநடுக்கத்தால் துருக்கியின் போலட் கிராமம் முற்றிலும் அழிந்துள்ளது.
    • கட்டிட இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    அங்காரா:

    துருக்கி, சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், இரு நாடுகளிலும் பெரும் சோக சுவடுகளை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டன.

    இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 5.20 லட்சத்துக்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளன.

    துருக்கியின் தென் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல நகரங்கள், கிராமங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தன. நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலட் கிராமம் முற்றிலும் உருக்குலைந்தது. அங்கு அனைத்து வீடுகளும் இடிந்து தரை மட்டமாகிவிட்டன.

    • துருக்கியில் அடுத்தடுத்து 6.4 மற்றும் 5.8 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
    • தொடர்ந்து அங்கு 30க்கு மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.

    அங்காரா:

    தெற்கு துருக்கி - சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    சிறிது நேரத்தில் துருக்கியின் ஹடாய் பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட தடவை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

    இந்நிலையில், துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

    துருக்கியின் 3 இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என அங்குள்ள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    துருக்கியில் ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது..

    • துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியது.
    • மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    அங்காரா:

    தெற்கு துருக்கி - சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    துருக்கியில் ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது..

    • நீங்கள் மனிதகுலத்திற்கு சிறந்த சேவை செய்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.
    • உலகில் எங்கு நெருக்கடிகள் ஏற்பட்டாலும், முதலில் செல்ல இந்தியா தயாராக உள்ளது.

    புதுடெல்லி:

    துருக்கி-சிரியாவில் கடந்த 6-ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உலகின் பல்வேறு நாடுகள் மீட்பு மற்றும் உதவிகளை வழங்கின. பல்வேறு நாடுகள் தங்கள் மீட்புக்குழுக்களை அனுப்பி வைத்தன.

    அந்த வகையில் 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் இந்தியாவும் மீட்புக்குழுக்களை அனுப்பி வைத்தது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 3 பிரிவின் 151 வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும், தேசியபேரிட மீட்புக்குழுவின் மோப்ப நாய்களும் மீட்பு பணியில் ஈடுபட்டன.

    இந்நிலையில், மீட்புப்பணிகளை முடித்துக்கொண்டு துருக்கியில் இருந்து இந்திய மீட்புக்குழுவினர் இன்று நாடு திரும்பினர். அவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். ஆபரேஷன் தோஸ்த் திட்டத்தில் துருக்கியில் மீட்பு பணியில் ஈடுபட்ட குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    அப்போது அவர் கூறுகையில், நீங்கள் மனிதகுலத்திற்கு சிறந்த சேவை செய்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். ஒட்டுமொத்த உலகத்தையும் நாம் ஒரே குடும்பமாக பார்க்கிறோம். குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் பிரச்சினையில் இருக்கும்போது அவருக்கு விரைவாக சென்று உதவி செய்வது இந்தியாவின் கடமை' என்றார்.

    இந்தியா தன்னிறைவு கொண்ட நாடாக தனது அடையாளத்தை வலுப்படுத்தியுள்ளது. தன்னலமற்ற சேவை நோக்கோடு பிற நாடுகளுக்கு உதவுகிறது. உலகில் எங்கு நெருக்கடிகள் ஏற்பட்டாலும், முதலில் செல்ல இந்தியா தயாராக உள்ளது. உலகின் சிறந்த நிவாரணம் மற்றும் மீட்புக் குழு என்ற நமது அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் மோடி கூறினார்.

    • நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு துருக்கிக்கு இந்தியா உதவியது.
    • இந்திய அரசை போலவே இந்திய மக்களும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவினார்கள்.

    துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 7-ந்தேதி ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தில் 44 ஆயிரம் பேர் பலியானார்கள். இதனால் நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு துருக்கிக்கு இந்தியா உதவியது. இதற்காக இந்தியாவுக்கான துருக்கி தூதர் பிராக் சனெல் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்திய அரசை போலவே இந்திய மக்களும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவினார்கள். உங்கள் மதிப்புமிக்க உதவிக்காக உங்கள் அனைவரையும் நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டில் சுமார் 46 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
    • நிலநடுக்கங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நேற்று மாலை நிறைவடைந்தன.

    துருக்கியில் பிப்ரவரி 6 ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக துருக்கி பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

    "இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து துருக்கியில் 6 ஆயிரத்து 040 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 1628 நிலஅதிர்வுகள் ரிக்டர் அளவு கோளில் 3 முதல் 4 ஆகவும், 436 முறை 4 முதல் 5 ஆகவும் பதிவாகி உள்ளது. 40 முறை ரிக்டர் அளவில் 5 முதல் 6 ஆக பதிவாகி இருக்கிறது. இதுதவிர 6.6 அளவிலும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டு இருக்கிறது," என நிலநடுக்கம் மற்றும் ஆபத்து குறைக்கும் திட்ட இயக்குனர் ஆர்ஹன் டட்டார் தெரிவித்தார்.

     

    மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து இது போன்ற நிலஅதிர்வுகள் நீண்ட காலத்திற்கு தொடரும். இவற்றில் பெரும்பாலானவை ரிக்டரில் 5 மற்றும் அதற்கும் அதிகமாகவே இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். தொடர் நிலநடுக்கங்களை அடுத்து டெக்டானிக் தட்டு பகுதிகளில் அமைந்து இருக்கும் துருக்கி நாடு 5 முதல் 6 மீட்டர் வரை நகர்ந்து இருக்கிறது.

    இந்த நிலநடுக்கங்களின் தாக்கம் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள் தூரத்திற்கு உணரப்பட்டு இருக்கிறது. துருக்கி நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 46 ஆயிரத்தை கடந்துள்ளது.

    • துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது.
    • பல ஆயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகின.

    அங்காரா :

    துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.

    துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது. வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் கட்டிட குவியல்களாக மாறிப்போயின.

    இந்த துயரம் துருக்கி மட்டும் இன்றி அண்டை நாடான சிரியா வரை நீண்டது. அங்கும் நிலநடுக்கத்தின் பாதிப்பால் பல ஆயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகின.

    இந்த நிலநடுக்கத்தால் இருநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர்.

    இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட அந்த இருநாடுகளுக்கும் உலக நாடுகள் அனைத்தும் உதவிக்கரம் நீட்டின. அதன்படி இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து சென்ற பேரிடர் மீட்பு குழுவினர் இரு நாடுகளையும் சேர்ந்த மீட்பு குழுக்களுடன் இணைந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

    இதன்பலனாக நிலநடுக்கம் ஏற்பட்ட பல நாட்களுக்கு பிறகும் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் இருந்து பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் உள்பட ஏராளமானோர் மீட்கப்பட்டனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைக்கு பேட்டியளித்த துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் இடிபாடுகளில் இருந்து 8 ஆயிரம் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.

    அந்த வகையில் நிலநடுக்கம் ஏற்பட்டு 13 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் துருக்கியின் அந்தாக்யா நகரில் கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதே பகுதியில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து கணவன், மனைவி மற்றும் குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது.

    இதனிடையே துருக்கியில் இதுவரை நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,642 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சிரியாவில் பலி எண்ணிக்கை 5,800 ஐ கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் நிலநடுக்கத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 2 வார காலமாக தீவிர மீட்பு பணிகள் நடந்து வந்த துருக்கியில் நேற்று மாலையுடன் மீட்பு பணிகள் நிறைவடைந்தன.

    இது குறித்து துருக்கி பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையத்தின் தலைவர் யூனுஸ் சேசர், கூறுகையில், "நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணி பெரும்பாலான மாகாணங்களில் முடிவடைந்துள்ளது. நாளை இரவுக்குள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முழுவதுமாக முடித்துவிடுவோம் என நம்புகிறோம். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 4,30,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்" என கூறினார்.

    • நிலநடுக்கம் நடைபெற்று 2 வாரம் நெருங்கி வரும் நிலையில் இன்றுடன் மீட்புபணிகளை நிறுத்த துருக்கி திட்டம்.
    • நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

    துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் கடந்த 6-ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதினானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி- சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன.

    நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

    இதனிடையே துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும்பணிகள் பல நாட்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த சூழ்நிலையில், நிலநடுக்கம் நடைபெற்று 2 வாரம் நெருங்கி வரும் நிலையில் இன்றுடன் மீட்புபணிகளை நிறுத்த துருக்கி திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன் சென்றுள்ளார்.

    அங்கு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டு வருகிறார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இடிபாடுகளில் இருந்து சத்தம் கேட்டு உஸ்மானை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்ததாக தகவல்
    • மீட்கப்பட்ட சிறுவன் ஸ்ட்ரெச்சரில் கண்களைத் திறந்திருக்கும் படத்தை சுகாதாரத்துறை மந்திரி பகிர்ந்துள்ளார்.

    துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ந்தேதி அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் நிலநடுக்கம் ஏற்பட்ட 11 நாட்களுக்குப் பிறகு துருக்கியில் இன்று சிறுவன் உள்ளிட்ட 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    அன்டாக்யாவில் உஸ்மான் என்ற 14 வயது சிறுவன் 260 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டதாக சுகாதாரத்துறை மந்திரி பஹ்ரதின் கோச்சா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன், மீட்கப்பட்ட சிறுவன் ஸ்ட்ரெச்சரில் கண்களைத் திறந்திருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் நிலநடுக்கத்தால் பேரழிவிற்குள்ளான ஹடாய் மாகாணத்தில் உள்ள அன்டாக்யாவில் உள்ள மருத்துவமனைக்கு உஸ்மான் அழைத்துச் செல்லப்பட்டதாக மந்திரி கூறினார்.

    இடிபாடுகளில் இருந்து சத்தம் கேட்டு உஸ்மானை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்ததாக அனடோலு மாநில செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    சிறுவனை மீட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மற்றொரு கட்டிட இடிபாடுகளில இருந்து 26 மற்றும் 33 வயதுடைய இரண்டு நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இத்தகவலையும்  மந்திரி கோச்சா கூறியுள்ளார். அவர்கள் சிகிச்சை பெறும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.  

    • மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
    • துருக்கி மீட்புக் குழுவினரை சிறுமியின் மாமா கட்டிப்பிடித்து நன்றி கூறினார்.

    துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ந்தேதி அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. 40 ஆயிரம் பேர் பலியாகி உள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் நிலநடுக்கம் ஏற்பட்ட 248 மணி நேரத்துக்கு பிறகு, கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் அலினா என்ற 17 வயது சிறுமியை துருக்கி மீட்புக்குழுவினர் இன்று உயிருடன் மீட்டனர். அவருக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்படுகிறது. மீட்புக்குழுவினரை சிறுமியின் மாமா கட்டிப்பிடித்து நன்றி கூறினார்.

    மீட்கப்பட்ட சிறுமி ஆரோக்கியத்துடன் இருந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்ட நிலக்கரி சுரங்க தொழிலாளி அலி அக்டோகன் தெரிவித்தார். இந்த கட்டிடத்தில் ஒரு வாரமாக வேலை செய்து வருகிறோம். இடிபாடுகளில் இருந்து மனிதர்களின் சத்தம் கேட்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தோம். உயிருள்ள ஒன்றை பார்க்கும்போதெல்லாம் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அது ஒரு பூனையாக இருந்தாலும் கூட மகிழ்ச்சி அடைவதாக அலி அக்டோகன் கூறினார்.

    • இந்திய அரசாங்கம் 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் மீட்புப் படையினர், மருத்துவ குழுவினர் ஆகியோரை அனுப்பியுள்ளது.
    • சிரியாவின் அலெப்போ நகரில் இந்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட நிவாரண உதவிகளை இந்திய ராணுவம் சிரியா அரசிடம் ஒப்படைத்தது.

    டமாஸ்கஸ்

    துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி 6-ந்தேதி ரிக்டர் 7.8 என்ற அளவில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 100-க்கும் மேற்பட்ட நிலநடுக்கமும் ஏற்பட்டு உள்ளது.

    நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 41 ஆயிரம் எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாடுகளில் இருந்தும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்திய அரசாங்கம் 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் மீட்புப் படையினர், மருத்துவ குழுவினர் ஆகியோரை அனுப்பியுள்ளது. இந்த நிலையில் சிரியாவின் அலெப்போ நகரில் இந்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட நிவாரண உதவிகளை இந்திய ராணுவம் சிரியா அரசிடம் ஒப்படைத்தது. இதில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில், "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு 'உலகம் முழுவதும் ஒரே குடும்பம்' என்ற கொள்கையின் அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • துருக்கியில் ஹடாய் நகரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களில் 5 பேர் 8 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
    • கடந்த 13-ந்தேதி இடிபாடுகளில் 18 வயது முகம்மது கபர் என்பவர் 198 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    துருக்கி, சிரியாவில் கடந்த 6-ந்தேதி அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியது. இதற்கிடையே கட்டிட இடிபாடுகளில் பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். துருக்கியில் ஹடாய் நகரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களில் 5 பேர் 8 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 13-ந் தேதி, இடிபாடுகளில் 18 வயது முகம்மது கபர் என்பவர் 198 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

    ×