என் மலர்
நீங்கள் தேடியது "முதியவர் லாரி"
- இவர் நேற்று தனது வீட்டிலிருந்து சென்னிமலைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
- அப்போது துரை சாமி லாரியின் பின் சக்கரத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார்.
சென்னிமலை
சென்னிமலை அடுத்த முகாசிபிடாரியூர் ஊராட்சி, சென்னியங்கிரிவலசு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (68). இவர் சென்னிமலையில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கி யில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று தனது வீட்டிலிருந்து சென்னிமலைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஈங்கூர் ரோட்டில் வந்த போது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. அப்போது துரை சாமி லாரியின் பின் சக்கரத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த துரைசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் மணப்பாறையை சேர்ந்த கிருஷ்ணனை பிடித்து விசாரித்து வரு கிறனர்.