search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் கடத்தல் வழக்கு"

    • ரேவண்ணாவை போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
    • விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அக்ரஹார சிறையில் அடைக்கபட்டார்.

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச வீடியோ தொடர்பாக ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தேடிப்படும் நபராக அறிவிக்க்ப்பட்டு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பிரஜ்வாலின் தந்தையும், எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகியோர் மீது வீட்டு பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மேலும் பிரஜ்வாலுடன் ஆபாச வீடியோவில் இருந்த ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவத்திலும் ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரேவண்ணாவை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அக்ரஹார சிறையில் அடைக்கபட்டார்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி முன்பு வந்தது.

    இந்நிலையில், பெண்ணை கடத்திய வழக்கில், ஜேடிஎஸ் எம்எல்ஏ ஹெச்.டி ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, ஹெச்.டி. ரேவண்ணா ரூ.5 லட்சம் மதிப்பிலான பிரமாண பத்திரம் தாக்கல் செய்து ஜாமின் பெற்றுக்கொள்ள, பெங்களூரு மக்கள் பிரதிநிதி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    • 18 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர்.
    • நாற்காலியில் அமர்ந்தபடியே இரவில் தூங்கினார்.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா (64). எம்.எல்.ஏ.வாக உள்ள இவர் மீதும், அவரது மகன் பிரஜ்வால் மீதும் வீட்டு பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே மைசூரு கே.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது தாயை ரேவண்ணா அவரது மனைவி பவானியின் உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கடத்தி சென்றதாக புகார் செய்தார். அதன் அடிப்படையில் கே.ஆர்.நகர் போலீசார் ரேவண்ணா, சதீஸ்பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் பிரஜ்வால் ரேவண்ணாவுடன் ஒரு வீடியோவில் ஆபாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    எனவே அந்த பெண் பிரஜ்வால் மீது புகார் கொடுக்காமல் இருக்க ரேவண்ணா மற்றும் சதீஸ்பாபு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து சதீஸ்பாபுவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க ரேவண்ணா பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில மணி நேரத்தில் தேவகவுடா வீட்டில் பதுங்கி இருந்த ரேவண்ணாவை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.

    பின்னர் பெங்களூரு பவுரிங் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து சென்று உடல் பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள சிறப்பு விசாரணைக்குழு அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்று விடிய, விடிய விசாரணை நடத்தினர். சுமார் 18 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் ரேவண்ணா நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். போலீசார் அவரை காவிலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர்.

    இதையடுத்து ரேவண்ணாவை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

    இதையடுத்து ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ள ஒரு அறையில் அவரிடம் விசாரணை தொடங்கியது.

    அவரிடம் பாலியல் பலாத்கார புகார்கள் மற்றும் பெண் கடத்தல் தொடர்பாகவும் அவரது மகன் பிரஜ்வால் குறித்தும் போலீசார் விசாரித்தனர். நள்ளிரவு வரை இந்த விசாரணை நடந்தது.

    பின்னர் ரேவண்ணாவை விசாரணைக்குழு அதிகாரிகள் படுத்து ஓய்வெடுக்க சொன்னார்கள். ஆனால் அவர் கீழே படுத்து தூங்க மறுத்துவிட்டார். நாற்காலியில் அமர்ந்தபடியே இரவில் தூங்கினார்.

    காலையில் எழுந்து விசாரணைக்குழு அலுவலகத்திலேயே ரேவண்ணா குளித்தார். தொடர்ந்து காலை உணவும் சாப்பிட்டார். இதையடுத்து மீண்டும் காலை 10 மணி முதல் அவரிடம் விசாரணை தொடங்கியது. எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் மற்றும் பிற அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காத ரேவண்ணா இந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார்.

    அப்போது அதிகாரிகள் சில ஆதாரங்களை முன்வைத்து கேள்விகளை கேட்டனர். அப்போது ரேவண்ணா அமைதியாக இருந்துள்ளார்.

    தொடர்ந்து ரேவண்ணாவை போலீசார் போட்டோ எடுத்தனர். அவரது கை ரேகைகளும் பெறப்பட்டது. முதலில் போட்டோ எடுக்கவும், கை ரேகை பெறவும் ரேவண்ணா எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது போலீசார் நாங்கள் எங்கள் வேலையை செய்கிறோம், அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    இதையடுத்து ரேவண்ணா ஒத்துழைத்தார். தொடர்ந்து ரேவண்ணாவிடம் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ரேவண்ணாவால் கடத்தப்பட்ட பெண்ணை மீட்ட போலீசார் அவரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

    பின்னர் அந்த பெண்ணை அவரது மகனுடன் பாதுகாப்பான இடத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    ரேவண்ணாவிடம் விசாரணை முடிவடைந்த பின்பு மீண்டும் 8-ந் தேதி அவரை கோர்ட்டில் போலீசார் அஜர்படுத்த உள்ளனர். விசாரணை நடந்து வரும் அலுவலகத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • குருத்திகாவை போலீஸ் விசாரணைக்காக ஆஜர்படுத்த அவரது பெற்றோர் வடமாநிலத்தில் இருந்து விமானம் மூலம் இன்று அழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியது.
    • மதுரை விமான நிலையத்திற்கு அவர்கள் வந்தால், அங்கு பெற்றோரிடம் இருந்து குருத்திகாவை மீட்பதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    மதுரை:

    தென்காசி அருகே உள்ள கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித் (வயது 22). இவரும், அதே பகுதியை சேர்ந்த குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நவீன் பட்டேல் என்பவரது மகள் குருத்திகா(22) என்பவரும் சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 27-12-2022 அன்று நாகர்கோவிலில் நோட்டரி பப்ளிக் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து குருத்திகா, வினித்தின் வீட்டில் இருந்தார். இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி குற்றாலம் போலீஸ் நிலையத்துக்கு வினித், குருத்திகா உள்ளிட்டோர் வந்து விட்டு திரும்பினர்.

    குத்துக்கல்வலசையில் ஒரு மர ஆலை அலுவலகத்தில் இருந்தபோது நவீன் பட்டேல் மற்றும் சிலர் அங்கு புகுந்து அவர்களை தாக்கி குருத்திகாவை காரில் கடத்தி சென்றனர். இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவியது.

    இதைத்தொடர்ந்து நவீன் பட்டேல் மற்றும் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். குருத்திகா மற்றும் அவரது பெற்றோர் கேரளா, கோவா, குஜராத் போன்ற இடங்களுக்கு மாறி மாறி சென்றனர்.

    இதனை போலீசார் அவர்களது செல்போன் சிக்னல் மூலம் பார்த்து சென்றபோது, வெவ்வேறு இடங்களுக்கு சென்றதால் அவர்கள் சிக்கவில்லை. அவர்களை பிடிக்க தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் குஜராத்தில் முகாமிட்டு தேடி வந்தனர்.

    இந்தநிலையில் அந்த வழக்கில் திடீர் திருப்பமாக குருத்திகா பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அதில் அவர், "நான் நன்றாக இருக்கிறேன். பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு ஏற்கெனவே மைத்ரிக் பட்டேலுடன் திருமணமாகிவிட்டது.

    நான், அவர் மற்றும் எனது பெற்றோருடன் நன்றாக பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு எந்த விதமான பிரஷரோ, டார்ச்சரோ கிடையாது" என்று கூறியிருந்தார்.

    இதற்கிடையே வினித் மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது மனைவி குருத்திகாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்திச் சென்று விட்டனர். அவர் குஜராத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை என்னுடன் சேர்த்து வைக்கும் வேண்டும். போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

    எனவே அவரை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வழக்கு குறித்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருகிற மார்ச் 1-ந்தேதி பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.

    இதற்கிடையே குருத்திகாவை போலீஸ் விசாரணைக்காக ஆஜர்படுத்த அவரது பெற்றோர் வடமாநிலத்தில் இருந்து விமானம் மூலம் இன்று அழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியது. மதுரை விமான நிலையத்திற்கு அவர்கள் வந்தால், அங்கு பெற்றோரிடம் இருந்து குருத்திகாவை மீட்பதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் குருத்திகா தனது பெற்றோருடன் இன்று மதுரைக்கு வந்தார். அவர் பிற்பகலில் மதுரை ஐகோர்ட்டில் ஆஜராகலாம் என தெரிகிறது.

    அதே நேரத்தில் குருத்திகாவின் தந்தை நவீன்பட்டேல் உள்ளிட்ட 8 பேர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×