என் மலர்
நீங்கள் தேடியது "சாலை இல்லாமல்"
- முத்தரசபுரத்தில் ஊரைச் சேர்ந்த விஜயகுமார் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.
- அடக்கம் செய்வதற்கு சாலை இல்லாமல் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நெல் வயல்களின் வழியாக வளர்த்த நெற்பயிர்களின் நடுவில் தூக்கி சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள முத்தரசபுரத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமார் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.
அவரை அடக்கம் செய்வதற்கு சாலை இல்லாமல் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சேறும், சகதியுமான நெல் வயல்களின் வழியாக விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த நெற்பயிர்களின் நடுவில் தூக்கி சென்றனர்.
மேலும் பல ஆண்டுகளாக இந்த துயரத்தை சந்தித்து வருவதாக வேதனையுடன் கூறும் அப்பகுதி மக்கள் கிராமத்தில் யாராவது உயிரிழந்தால் ஒவ்வொரு முறையும் வயலில் தூக்கி சென்று பாடுபட்டு வளர்த்த நெற்பயிர்கள் நாசமாவதாக வேதனையோடு கூறியுள்ளனர்.
மேலும், மழைகாலங்களில் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கி செல்லும் நிலை ஏற்படுவதாகவும், நிரந்தர சுடுகாடு கட்டிடம் கூட இல்லாமலும் கீற்று கொட்ட கைகள் அவ்வப்போது அமைத்து சடலங்களை எரி ஊட்டுவதாகவும், பல நேரங்களில் மழையினால் நனைந்து சடலங்கள் பாதியிலேயே எரிந்து நின்று விடுவவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
கிராம மக்கள் பல ஆண்டுகளாக புகார் மனு கொடுத்தும் நாகை மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள், விரைவில் சுடுகாட்டிற்கு சாலை அமைத்து தர வேண்டும் என்றும் தமிழக அரசு இதில் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.