என் மலர்
நீங்கள் தேடியது "கும்ப பூஜை"
- அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா 11 நாட்கள் நடைபெற்றது.
- கும்பகோணம் பூஜையில் வைக்கப்பட்ட சிறப்பு பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வெள்ளிச்சந்தை சாலையில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா 11 நாட்கள் நடைபெற்றது.
விழாவையொட்டி அங்காளம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்று 11 நாட்களும் வீதி உலா நடைபெற்றன. தொடர்ந்து மயான கொள்ளை செல்லுதல் அம்மன் ஊர்வலம், வான வேடிக்கை, என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவின் கடைசி நாளான நேற்று அங்காளம்மன் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது இதைத் தொடர்ந்து இரவு அம்மனுக்கு கும்ப பூஜை நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது. பின்னர் மேள தாளங்கள் முழங்க அங்காளம்மனுக்கு பல்வேறு வகையான உணவுகள் படையலிடப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த பூஜையில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த பூஜையொட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கும்பகோணம் பூஜையில் வைக்கப்பட்ட சிறப்பு பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
- மயான கொள்ளை திருவிழா ஒரு வாரம் நடைபெற்றது.
- சிறப்பு பிரசாதம் மற்றும் அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி, அன்னசாகரம் நடுவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை திருவிழா ஒரு வாரம் நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளை தொடர்ந்து மயானம் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் நடைபெற்றன. விழாவின் கடைசி நாளான நேற்று இரவு கும்ப பூஜை செய்யப்பட்டது.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார சேவை மற்றும் மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு பல்வேறு வகையான உணவு படையலிடப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த பூஜையொட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கும்ப பூஜையில் வைக்கப்பட்ட சிறப்பு பிரசாதம் மற்றும் அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- கும்ப பூஜையில் ஏழு வகையான உணவு, பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகளை வைத்து, பம்பை வாத்தியங்கள் முழுங்க பூஜை நடைபெற்றது.
- கும்ப பூஜைக்கு சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மார ண்டஹள்ளி பச்சையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்தில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டி பச்சையம்மனின் 18-ம் ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா கடந்த வெள்ளிக் கிழமை முதல் தொடங்கியது. இதில் தைப்பூச தினத்தன்று பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பச்சையம்மன் திருத்தேர் வீதி உலா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து விழாவில் இறுதி நாளான நாளை கிடா வெட்டுவதற்கு முன், இன்று பச்சையம்மனுக்கு கும்ப பூஜை நடைபெற்றது.
இந்த கும்ப பூஜையில் ஏழு வகையான உணவு, பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகளை வைத்து, பம்பை வாத்தியங்கள் முழுங்க பூஜை நடைபெற்றது.
இந்த கும்ப பூஜைக்கு சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
மேலும் இந்த கும்ப பூஜையை தொடர்ந்து இரவு 12 மணிக்கு 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு, நாளை காலை முதல் மாலை வரை பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.