என் மலர்
நீங்கள் தேடியது "6 பேர் மாயம்"
- விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் மாயமானார்கள்.
- இந்த சம்பவங்கள் குறித்து தளவாய்புரம், ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
ராஜபாளையம் சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் முப்பிடாதி. இவரது மகள் சமுத்திரகனி. சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் ராதிகா. கல்லூரி மாணவியான இவர், அதே பகுதியை சேர்ந்த காதலன் கனி என்பவருடன் மாயமாகி விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளக் கோட்டையை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் பாரதி (38). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் வீட்டில் இருந்து மாயமானார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் பரங்கிரி நாதபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(47). பிளாஸ்டிக் கடை நடத்தி வரும் இவர் சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் காந்திநகரை சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவரது கணவர் கருப்பையா. குடும்ப பிரச்சினை காரணமாக மாரீஸ்வரி தாய் வீட்டில் வசித்து வருகிறார். திருப்பூரில் வேலை பார்த்து வரும் கருப்பையா சம்பவத்தன்று விருதுநகருக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கருப்பையா மாயமானார். பாண்டியன்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள கோவில்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (52). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று ஊர் திரும்பி னார். ஆடு வியாபாரம் செய்து வந்த இவர் திடீரென மாயமானார். ஆமத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கூலித்தொழிலாளி, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர் உள்பட 6 பேர் மாயமாகினர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பூதிப்புர த்தை சேர்ந்தவர் ராம்தாஸ் (வயது63). கூலித்தொழி லாளி. சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார்.
இது குறித்து பழனிசெட்டி பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து முதியவரை தேடி வருகின்ற னர்.
பழனிசெட்டிபட்டி அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி புவனேஸ்வரி (34). மகள்கள் பவித்ரா (13), கிருபா (12), சம்பவத்தன்று ரவிக்குமார் வேலைக்கு சென்று விட்டார். மாலை வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த மனைவி மற்றும் மகள்கள் மாயமாகி இருந்தனர். செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்ப ட்டிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தும் கிடைக்காததால் பழனி செட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே கும்பக்கரை பிரிவு பகுதியை சேர்ந்தவர் அழகுபாண்டி மனைவி கோகிலா (21). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட னர்.
இந்த நிலையில் கோகிலா திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கா ததால் பெரியகுளம்
தேவதானப்பட்டியை சேர்ந்தவர் வீராச்சாமி (55). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பள்ளியில் விசாரித்தபோது விடுமுறை என்று கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி லட்சுமி பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதான ப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீராச்சாமியை தேடி வருகின்றனர்.