search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "26 கோரிக்கை"

    • கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.
    • நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நிலஅளவை அலுவலர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் செய்தனர்.

    இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் முருகானந்தம், முன்னாள் அரசு ஊழியர்கள் சங்க மாநில துணை தலைவர் நடராஜன், செயளாலர் இளவரசன், கூட்டுறவு துறை ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் சிவபழனி, சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் கலா, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ரவிந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட துணை தலைவர் இளையராஜா வரவேற்றார். அப்போத கோரிக்கைகளானகள பணியாளர்களின் பணிச்சு மையைக் குறைத்திடவும்.

    களப்பணியாளர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிடு.

    உட்பிரிவு செய்ய முடியாத இன மனுக்களின் மீது கூட்டு பட்டா பரிந்துரை வழங்கிட.

    நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட, தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

    காலமுறை ஊதியத்தில் புல உதவியாளர்களை நியமிக்க வேண்டும்.

    துணை ஆய்வாளர்கள், ஆய்வாளர் ஊதிய முரன்பாடுகளை களைந்திட.

    தமிழகம் முழுமைக்கும் நவீன மறு நில அளவை திட்டம் துவங்கிட திட்டப்பணியில், பணியாற்றும் களப்பணி யாளர்களுக்கு மலைப்படி வழங்கிட வேண்டும்.

    அனைத்து வட்டங்க ளுக்கும் ஒரு டி.ஜி.பி.எஸ். கருவி வழங்கிட பணிச்சுமையை போக்கிட உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிதர தர்ணா போராட்டம் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நில அளவை துறை மாநில தலைவர் தர்மராஜன், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராமதேவன், ரமேஷ், மாவட்ட பொருளாளர் ரோஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    ×