என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சூரிய குடும்பம்"
- வானில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என்ற 8 கோள்கள் உள்ளன.
- செவ்வாய், சனி வெறும் கண்ணுக்கு மங்கலாக தெரியும்.
சென்னை:
சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. இதில் பூமி ஒருமுறை சூரியனை சுற்றிவர 365 நாட்கள் ஆகின்றன. இதேபோல, ஒவ்வொரு கோள்களுக்கும் குறிப்பிட்ட நாட்கள் ஆகின்றன. கோள்களின் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூா்வ நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படுகிறது. இதுதவிர சமீபத்தில் வானில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நகர்ந்து சென்றதையும் வெறும் கண்களால் காண முடிந்தது. இவ்வாறு அவ்வப்போது விண்ணில் ஏதாவது ஒரு வர்ண ஜாலத்தை காணமுடிகிறது. அந்தவகையில் ஒரு அரிய காட்சி விண்ணில் அரங்கேற இருக்கிறது.
வானில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என்ற 8 கோள்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அதற்குரிய கோணத்தில் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.
வரும் ஜூன் 3-ந்தேதி, கிழக்கு திசையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக அடி வானில், வியாழன் (ஜூபீடர்), புதன் (மெர்குரி), யுரேனஸ், செவ்வாய் (மார்ஸ்), நெப்டியூன், சனி என்ற வரிசையில், 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவதை, பூமியில் இருந்து பார்க்கலாம். இதில் யுரேனஸ், நெப்டியூன், புதன் சற்று தூரமாக இருப்பதால் இதனை பார்ப்பது கடினம். வானம் தெளிவாக இருந்தால் கடற்கரை பகுதிகளில் பார்க்க முடியலாம். மீதம் உள்ளவற்றை பைனாகுலர் மூலம் தெளிவாக பார்க்கலாம்.
நமது சூரியப் பாதையில் ஒவ்வொரு கோளும் வெவ்வேறு (பல நூறு கோடி கிலோ மீட்டர்) தூரத்திலும், வெவ்வேறு சாய்வு கோணத்திலும் சுற்றி வருவதால் அவை எப்போதும் ஒரே நேர்கோட்டில் அணிவகுப்பதற்கு வாய்ப்பில்லை. அவ்வாறு ஒரே வரிசையிலும் ஒரே நேர்கோட்டிலும் அணிவகுத்து வருவது மிக அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
அதேநேரம், கோள்கள் ஒரே நேர்கோட்டில் காணப்படவில்லை. மாறாக பூமியில் இருந்து பார்க்கும்போது இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை நமக்கு தருகிறது. இதனை காற்று மற்றும் ஒளி மாசுபாடு இல்லாத, அடிவானம் மறைக்காத சற்று உயரமான இடத்தில் அமர்ந்துகொண்டு பார்ப்பது மிகவும் சிறந்தது.
செவ்வாய், சனி வெறும் கண்ணுக்கு மங்கலாக தெரியும். ஜூன் 3-ந்தேதி சனிக்கோளுக்கு கீழேயும், 4-ந்தேதி செவ்வாய் கோளுக்கு கீழேயும் பிறைச் சந்திரனையும் காணலாம். இது கண்ணுக்கு விருந்தாக அமையும். 5-க்கும் மேற்பட்ட கோள்கள் அரிதாக வருகிற ஆகஸ்டு 28-ந்தேதி, 2025-ம் ஆண்டு ஜனவரி 18, பிப்ரவரி 28, ஆகஸ்டு 29 ஆகிய தேதிகளில் தெரியும்.
இதனை சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் லெனின் தமிழ்கோவன் கூறினார்.
- சுக்கிரன், சந்திரனுக்கு அருகில் காணப்பட்ட அற்புதமான காட்சியை நாசா டுவிட்டரில் வெளியிட்டு இருந்தது.
- உலகெங்கிலும் உள்ள வானத்தை நோக்குபவர்களை மகிழ்வித்தது.
வானில் பல அதிசய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அந்த வகையில் சூரிய குடும்பத்தில் பிரகாசமான கிரகமான வெள்ளி கிரகம், சந்திரனுக்கு அருகில் மின்னிய அற்புதமான காட்சியை நாசா டுவிட்டரில் வெளியிட்டு இருந்தது. மிகவும் அரிய வான நிகழ்வுகளில் ஒன்றான இந்த காட்சி உலகெங்கிலும் உள்ள வானத்தை நோக்கு பவர்களை மகிழ்வித்தது.
சந்திரனின் இருண்ட விளிம்புக்கு பின்னால் வெள்ளி மெதுவாக மறைந்ததால் இரண்டும் ஒரே பார்வையில் தோன்றின. ஒன்றாக இணைந்தன. இந்த காட்சி டுவிட்டரில் வெளியாகி வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து பயனாளர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி இரவு சந்திரன் உள்பட 5 கிரகங்கள் வானில் தெரியும் என கூறப்பட்டுள்ளது. இந்த 5 கிரகங்களும் நேர்கோட்டில் இல்லாமல் ஆர்ச் போல காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாக்ஸ் நியூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வருகிற 28-ந்தேதி சூரியன் மறைவுக்கு பிறகு நீங்கள் பார்க்கக்கூடிய கிரகங்களில் செவ்வாய், வீனஸ், வியாழன், புதன் மற்றும் யுரேனஸ் ஆகியவை அடங்கும். வியாழன் புதனை விட பிரகாசமாக காணப்படும். அதே சமயம் வீனஸ் அனைத்து கிரகங்களையும் விட பிரகாசமான கிரகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதாவது வியாழன் மற்றும் புதனின் மேல் இடது புறத்தில் வீனஸ் பிரகாசமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. எல்லா வற்றிலும் மிகவும் திகைப்பூட்டும் வீனஸ் கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- சந்திரனின் விட்டத்தில் 3-ல் ஒரு பங்கை விட சற்று குறைவாக உள்ளது.
- ஒரு குள்ள கிரகம் என்றும் சொல்லலாம்.
லண்டன்:
சூரிய குடும்பத்தை பற்றிய ஆய்வுகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய ஆப்டிக்கல் தொலை நோக்கியான 10.4 மீட்டர் விட்டம் கொண்ட கிரேன் டெலஸ்கோப்பியோ கனரி யாசில் பொருத்தப்பட்ட இங்கிலாந்தின் ஷெபீல்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டஅதிநவீன கேமிராவை பயன்படுத்தி சர்வதேச வானியலாளர்கள் குழு ஒரு ஆய்வை ஸ்பெயினில் நடத்தியது.
இந்த ஆய்வின் கண்டுபிடிப்பு குறித்த தகவல்கள் வெளியானது. ஆய்வின்படி, வளைய அமைப்பு குவாவர் என்று பெயரிடப்பட்ட ஒரு குள்ள கிரகத்தை சுற்றி உள்ளது. குவாவர் புளூட்டோவின் விட்டத்தில் பாதியை கொண்டுள்ளது என்று சொல்லலாம்.
அதுபோல் சந்திரனின் விட்டத்தில் 3-ல் ஒரு பங்கை விட சற்று குறைவாக உள்ளது. எனவே இதை ஒரு குள்ள கிரகம் என்றும் சொல்லலாம். ஈர்ப்பு விசையால் வட்ட வடிவில் இழுக்கப்படும் குள்ள கிரகம் இது.
இதுவரை அறியப்பட்ட அனைத்து அடர்த்தியான வடிவங்களும் ரோச் எல்லைக்குள் இருப்பதால் அவற்றின் அடிப்படை கிரகத்திற்கு அருகில் அமைந்திருந்ததாக ஆய்வு குறிப்பிடுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்