என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெங்கு விழிப்புணர்வு முகாம்"

    • ராயகிரி பேரூராட்சி செயல் அலுவலர் சுதா முகாமை தொடங்கி வைத்தார்.
    • மருந்து அடிக்கும் பணி,நெகிழி பொருட்கள் அகற்றும் பணியும் நடைபெற்றன.

    சிவகிரி:

    சிவகிரி அருகே ராயகிரி பேரூராட்சியும், ராயகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் சாந்தி சரவணபாய் ஆலோசனையின்படி, டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு ராயகிரி பேரூராட்சி செயல் அலுவலர் சுதா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவ அலுவலர் கிருபா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராயகிரி பகுதியில் காந்தி தெரு, பள்ளிக்கூட தெரு, மெயின் ரோடு, மருத்துவமனை தெரு ஆகிய இடங்களில் மருத்துவ முகாம், நிலவேம்பு குடிநீர் வழங்கல், ஓட்டுமொத்த தூய்மைப்பணி, புகை மருந்து அடிக்கும் பணி, கேட்பாரற்று கிடந்த டயர், உரல், நெகிழி பொருட்கள் ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் பாரத், இசக்கிமுத்து, சிவா மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக டெங்கு விழிப்புணர்வு குறித்த பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் பாரத் செய்திருந்தார்.

    ×