search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படி பூஜை"

    • மகரவிளக்கு வழிபாடு முடிந்து பக்தர்கள் மலை இறங்கும்போது ஏராளமானோர் தரிசனத்திற்காக மலை ஏறினர்.
    • படி பூஜையில் மத்திய மந்திரி எல்.முருகன், திருவிதாங்கூர் காவடியார் அரண்மனை கோபிகவர்மா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டும் அதுபோல் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.

    இதனால் மகரவிளக்கு தரிசனத்திற்கு உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இருப்பினும் சபரிமலை மகரவிளக்கு வழிபாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். மகரவிளக்கு வழிபாடு முடிந்து பக்தர்கள் மலை இறங்கும்போது ஏராளமானோர் தரிசனத்திற்காக மலை ஏறினர்.


    இந்நிலையில் மகரவிளக்கு வழிபாட்டுக்கு பிறகு சபரிமலையில் சிறப்பு படிபூஜை தொடங்கியது. தினமும் நடைபெறும் படிபூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற படி பூஜையில் மத்திய மந்திரி எல்.முருகன், திருவிதாங்கூர் காவடியார் அரண்மனை கோபிகவர்மா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    வருகிற 20-ந்தேதி வரை படிபூஜை நடைபெற உள்ளது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் அவர்களுக்கு தேவையான வசதிகளை திருவிதாங்கூர் தேவச ம்போர்டு செய்து வருகிறது. 

    • பெண் பக்தர்கள் ஒவ்வொரு படிகளுக்கும் மஞ்சள், குங்குமம் வைத்தும், கற்பூரம் ஏற்றியும் ஊர்வலமாகச் சென்று திருமலையை அடைந்தனர்.
    • மண்டல உறுப்பினர்கள் பாரம்பரிய பஜனைகளை பாடியபடி திருமலையை அடைந்தனர்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் தாச சாகித்ய திட்டம் சார்பில் திருப்பதி, திருமலையில் 3 நாட்கள் பஜனை மண்டல யாத்திரை எனப்படும் படித்திருவிழாவை ஏற்பாடு செய்து நடத்தியது.

    3-வது நாளான நேற்று அதிகாலை திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசாமி 3-வது சத்திரத்தில் தொடங்கிய பஜனை மண்டல யாத்திரை அலிபிரி பாத மண்டபத்தை அடைந்தது. அங்கு, தாச சாகித்ய திட்ட சிறப்பு அலுவலர் ஆனந்ததீர்த்தாச்சாரியார் மற்றும் சீனிவாஸ் ஆகியோர் சேர்ந்து அங்குள்ள படிக்கட்டுகளுக்கு சிறப்புப்பூஜைகள் நடத்தி பஜனை மண்டல யாத்திரையைத் தொடங்கி வைத்தனர்.

    யாத்திரையில் பங்கேற்ற ஏராளமான பெண் பக்தர்கள் ஒவ்வொரு படிகளுக்கும் மஞ்சள், குங்குமம் வைத்தும், கற்பூரம் ஏற்றியும் ஊர்வலமாகச் சென்று திருமலையை அடைந்தனர். அங்கு அவர்கள் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இத்துடன் பஜனை மண்டல யாத்திரை நிறைவடைந்தது.

    படிபூஜையில் பங்கேற்ற சீனிவாஸ் பேசியதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை புகழ்ந்து பல்வேறு பக்தி பாடல்களை பாடிய புரந்தரதாசர், திருவியாச ரஜயதேஸ்வர், தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார், விஜயநகர பேரரசர் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் ஆகியோர் ஏழுமலையான் மீதிருந்த அதீத பக்தியோடு அலிபிரி பாதையில் நடந்து திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    அவ்வாறு சாமி தரிசனம் செய்த அவர்கள், ஏழுமலையானின் மகிமையைப் பரப்பி உள்ளனர். அப்படிப்பட்டவர்களின் அடிச்சுவடுகளை நாம் அனைவரும் பின்பற்றி, ஏழுமலையானின் அருளுக்கு தகுதி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் திருப்பதி தேவஸ்தானம் படி உற்சவத்தை நடத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    யாத்திரையில் பஜனை மண்டல உறுப்பினர்கள் பாரம்பரிய பஜனைகளை பாடியபடி திருமலையை அடைந்தனர். அதில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பஜனை மண்டல உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜோதி தரிசனம் காட்டப்பட்டது
    • எராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த, கீழ்வீதி கிராமத்தில் ஸ்ரீ அய்யப்ப சுவாமிக்கு 10-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது.

    இக்கிராமத்தில் செயல்பட்டுவரும் ஸ்ரீ மணிகண்ட பக்த பஜனை சபாவின் ஏற்பாட்டில் பூஜை நடைபெற்றது.

    விழாவுக்கு சிவா குருசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செல்வம் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீ அய்யப்பனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் 18 படிகள் அமைத்து பஜனை குழுவினர் பக்தி பாடல்கள் பாடினார்.

    பின்பு ஜோதி தரிசனம் காட்டும்போது சுவாமியே சரணம் அய்யப்பா என்று கூறியவறு சாமி தரிசனம் செய்தனர். இதில் விக்டல் குருசாமி, குமார், மதியழகன், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ×