search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்பன்டங்கள்"

    • விளையாட்டு பொருட்களை காண்பித்து அதில் விளையாடுவது குறித்து விளக்கி கூறினர்.
    • பக்கோடா, பாப்கார்ன், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு தின்பண்டங்கள் கொடுக்கப்பட்டன.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் கல்யாண சுந்தரம் பள்ளியில் டிவாஸ் ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு பொருட்கள் அடங்கிய பொருட்காட்சி நடைபெற்றது.

    இந்த பொருட்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் முன்னிலை வகித்தார்.

    கல்யாணசுந்தரம் பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம், திவாஸ் ரோட்டரி சங்க மண்டல துணை கவர்னர் நாராயணன், பள்ளி நிர்வாக தலைவர் அருணபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    திவாஸ் ரோட்டரி சங்கம் தலைவி ரேவதி வேணுகோபாலன், செயலாளர் செல்வவள்ளி சந்திரசேகரன், சாசன தலைவி ஆனந்தி முரளி ஆகியோர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விளையாடும் வகையில் அமைக்க ப்பட்டிருந்த ராட்டினம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுப் பொருட்களை காண்பித்து அதில் விளையாடுவது குறித்து விளக்கி கூறினர்.

    இதில் மாற்று திறனாளி மாணவர்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். அவர்களுக்கு டெல்லி அப்பளம், காலிபிளவர் பக்கோடா, பாப்கார்ன், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு தின்பண்டங்கள் கொடுக்கப்பட்டன. மதியம் பல வகையான அரிசி சாதம் உணவாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் சக்திவேல் மற்றும் ஏராளமான மாற்று திறனாளி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×