என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயன்முறை மருத்துவ முகாம்"

    • மருத்துவ முகாமை கடையம் ஒன்றிய தி.மு.க.செயலாளர் ஜெயக்குமார் தொடங்கிவைத்தார்.
    • முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    கடையம்:

    சிவசைலம் அவ்வை ஆசிரம டாக்டர் சவுந்தரம் சிறப்பு பள்ளி , நண்பர்கள் ரத்ததான கழகம் மற்றும் சென்னை ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சார்பில் இயன்முறை சிகிச்சை நிபுணர்களைக் கொண்டு இலவச இயன்முறை மருத்துவ முகாம் கடையம் எஸ்.டி.சி. கிளை தொடக்க பள்ளியில் நடைபெற்றது.

    அவ்வை ஆசிரம துணைத்தாளாளர் பாலமுருகன் வரவேற்றார். கடையம் நண்பர்கள் ரத்ததான கழகத் தலைவர் யாசர் அரபாத் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட ஜக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக பொருளாளர் ஹயாத் அன்சர், நண்பர்கள் ரத்ததான கழக உறுப்பினர் ஹமீது ஹம்சத் அலி, பொட்டல் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையம் ஒன்றிய தி.மு.க.செயலாளர் ஜெயக்குமார் மருத்துவ முகாமை தொடங்கிவைத்தார்.

    ரவணசமுத்திரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் புகாரி மீரா சாகிப், அண்ணாத்துரை, சசிகுமார், அர்ஜுனன், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பக்க விளைவற்ற இயன்முறை மருத்துவம் மற்றும் பயன்கள் குறித்த விழிப்புணர்வுடன் முகாம் நடைபெற்றது. முகாமில் உடலில் உள்ள நரம்பு, தசை, நீண்டகால வலிகள், முதுகு தண்டுவட பாதிப்பு, கழுத்துவலி, முதுகு வலி, தோள்பட்டை வலி, மூட்டுவலி, பாதவலி, பாத எரிச்சல், உடல் எடை குறைத்தல், முழங்கை வலி, குழந்தையின் வளர்ச்சி நிலையில் தாமதம், பக்கவாதம், சுளுக்கு மற்றும் தசைப்பிடிப்பிற்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மருத்துவர்கள் ஷியாம் சுந்தர் மற்றும் வினிதா சிகிச்சை அளித்தனர். முகாமில் சிகிச்சை பெற்ற பயனாளிகள் அவ்வை ஆசிரம செல்வன் சுவாமிநாதன் ஆரோக்கிய மையத்தில் செயல்படும் இயன்முறை மருத்துவ பிரிவில் இலவச தொடர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

    ×