search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரணநிதி"

    • தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு இரங்கல்.
    • பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவு.

    விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும், பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி மேற்கு கிராமத்தைச் சேர்ந்த குழந்தை லியா லக்ஷ்மி (வயது 5) த/பெ.பழனிவேல் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்றுவந்த நிலையில் இன்று (03.01.2025) பிற்பகல் பள்ளியிலிருந்த கழிவு நீர்த் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை லியா லக்ஷமியின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுச்சேரியில் ஆண்டு சராசரி மழையளவு 1,399 மி.மீ.. ஆனால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1688.8 மி.மீ மழை பெய்துள்ளது.
    • புதுச்சேரி அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறது.

    ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை சரிசெய்ய ரூ.600 கோடி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சூறாவளி புயலின் போது ஏறத்தாழ 500 மரங்கள் மற்றும் 1,596 மின் கம்பங்கள் விழுந்து சேதமடைந்தன. மேலும் 2,15,750 ஏ.சி.எஸ்.ஆர் கண்டெக்டர்கள், 53 எண்ணிக்கையிலான ஆற்றல் திறன் கொண்ட மின்மாற்றிகள் மற்றும் 52 பள்ளிகள்/கல்லூரிகள் கட்டிடங்கள் சேதமடைந்தன.

    புதுச்சேரியில் ஆண்டு சராசரி மழையளவு 1,399 மி.மீ.. ஆனால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1688.8 மி.மீ மழை பெய்துள்ளது. சுமார் 1,50,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சுவிடுவது அவசியம் என்று கருதுவதால், இந்த அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறது. இந்த நிர்வாகத்தின் அந்தந்தத் துறைகள், கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களைத் துறை வாரியாக கீழ்க்கண்டவாறு தற்காலிக மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளன. 

    முதற்கட்டமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக ரூ.600 கோடி விடுவிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு

    புதுக்கோட்டை,

    துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக ஏராளமான மக்கள் பலியான நிலையில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உலக நாடுகள் உதவி செய்து வருகின்றன. இந்த நிலையில் துருக்கி மக்களுக்கு நிவாரணமாக தாங்கள் உண்டியலில் சேமித்த பணத்தை அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் தனது தந்தையுடன் வந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர். இது பற்றிய விவரம் வருமாறு:- புதுக்கோட்டை காமராஜபுரம் 25-ம் வீதியை சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 43). எலக்ட்ரீசியன். இவரது மனைவி பைரோஸ். இவர்களுக்கு அப்துல் மாலிக் (12), அப்துல் ரகுமான் (10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் அப்துல் மாலிக் 6-ம் வகுப்பும், அப்துல் ரகுமான் 4-ம் வகுப்பும் புதுக்கோட்டையில் அரசு உயர் தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் பெற்றோர் கொடுக்கும் சிறு, சிறு பணத்தை உண்டியலில் சேமித்து வைப்பதை பழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் துருக்கியில் நில நடுக்கத்தால் மக்கள் பாதிப்படைந்த நிலையில் அவர்களுக்கு நிவாரணமாக தங்களால் முடிந்த உதவியை செய்ய அவர்கள் எண்ணினர். இதற்காக உண்டியலில் அவர்கள் சேமித்த பணத்தை நிவாரணமாக கொடுக்க முன்வந்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளனர். இருவரும் தனித்தனியாக வைத்திருந்த உண்டியலில் சேமித்த பணத்தை எடுத்துள்ளனர். இதில் அப்துல் மாலிக் ரூ.600-ம், அப்துல்ரகுமான் ரூ.700-ம் சேமித்திருக்கின்றனர். இந்த பணத்தோடு தனது தந்தையின் பங்களிப்பு ரூ.800 உடன் சேர்த்து ரூ.2,100-ஐ கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அதிகாரி செல்வியிடம் துருக்கி மக்களுக்காக நிவாரண நிதியாக வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட அவர், அரசு மூலம் அந்த பணத்தை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் மாணவர்களின் இந்த செயலை கண்டு அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.

    ×