search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "150 பேர் கைது"

    • விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ள சாராயம் மற்றும் போலி மது குடித்து 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • போலி மது விற்பவர்களையும் ் பிடிக்க தமிழக டி.ஜி.பி சைலேரேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    சேலம்:

    விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ள சாராயம் மற்றும் போலி மது குடித்து 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதையடுத்து தமிழக முழுவதும் சாராயம் விற்பவர்களையும், போலி மது விற்பவர்களையும் ் பிடிக்க தமிழக டி.ஜி.பி சைலேரேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள் .

    இந்த நிலையில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் சேலம் புறநகர் பகுதியில் சாராயம் மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து மற்ற வகையில் 100 பேரும், மாநகரில் மது பாட்டில்களை வாங்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற 50 பேரும் என 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    தொடர்ந்து சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சோதனை இனி வரும் நாட்களிலும் தொடரும் என போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஊழியர்கள் 10 ஆண்டுகளாக வேலைபார்த்து வருகின்றனர். அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்கவேண்டும். ,
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் 10 ஆண்டுகளாக வேலைபார்த்து வருகின்றனர். அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்கவேண்டும். பணிநிரந்தரம் செய்து, வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டனர்

    .அதேபோன்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெருமாள், முத்துக்குமரன், மைக்கேல், வீரமுத்து, ஜெயபாலன், கார்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஒப்பந்த தொழி லாளர்களை சாலை மறியலில் ஈடுபடவேண்டாம் என்று வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்து விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் அடைத்தனர். இதனால் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×