என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசாரணை ஒத்திவைப்பு"

    • நூற்றுக் கணக்கான மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பம் மீனவ கிராமத்திற்கு கடல் வழியாக சென்றனர்.
    • பஞ்சநாதனை பயங்கர ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பஞ்சநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்,:

    கடலூர் தேவனாம்பட்டி னம் மற்றும் சோனாங் குப்பம் மீனவர்களுக்கு முன் விரோத தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டு கடலில் தாக்கிக் கொண்டனர்இதனை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டி னத்தில் இருந்து நூற்றுக் கணக்கான மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பம் மீனவ கிராமத்திற்கு கடல் வழியாக சென்றனர்.அப்போது சோனாங் குப்பம் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் என்பவர் தேவனாம்பட்டி னம் மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட சென்றார். இதில் ஆக்ரோஷமாக வந்த தேவனாம்பட்டினம் சேர்ந்த மீனவர்கள் பட்டப் பகலில் பஞ்சநாதனை பயங்கர ஆயுதங்களை கொண்டு குத்தியதில் பஞ்சநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 மீனவர்கள் காயமடைந்தனர்.இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட தினகரன் என்பவர் வழக்கு விசாரணையில் இருந்தபோது இறந்து விட்டார். இதனை தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் நீதிமன்ற வளாகம், தேவனாம்பட்டினம், சோனாங் குப்பம் மற்றும் கடற்கரை பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.மேலும் எந்தவித அசம்பாவிதம் ஏற் படாமல் இருக்க ஏராளமான போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்இது மட்டுமின்றி அந்த பகுதிகளில் காரணமின்றி பொதுமக்கள் கூடாத வகையில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வந்ததுஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி வருகிற மார்ச் 4-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

    • உண்மை குற்றவாளிகளை கண்டறியவும், சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரியும் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • சி.பி.சி.ஐ.டி. குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து முதலில் வேங்கை வயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்து உள்ளனர்.

    இதில் வேங்கை வயலை சேர்ந்த 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். மேலும் உண்மை குற்றவாளிகளை கண்டறியவும், சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரியும் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்து உள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் மூவர் சார்பில் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், புகார்தாரரை சரியாக விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை நகல் வேண்டும். குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த மனு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்.1-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    ×