search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர் சுட்டுக்கொலை"

    • சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.
    • உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், 25 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சேலம் மாவட்டம் கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற மீனவரை கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளனர்.

    மேலும் இது போன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், 25 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மீனவர் ராஜாவின் உடல் சென்னம்பட்டி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    • கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

    சென்னை:

    தமிழக மீனவர் மீது கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், கொளத்தூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 14.2.2023 அன்று காவிரியாற்றில் மீன்பிடிக்கச் சென்றார்கள் என்றும், அவர்கள் மீது கர்நாடக மாநில வளத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ராஜா என்ற காரவடையான் உயிரிழந்துள்ளார் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    ராஜா என்ற காரவடையான் உடல் சென்னம்பட்டி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த ராஜா என்ற காரவடையானை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    • தமிழக-கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
    • சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள பாலாறு சோதனைச்சாவடியில் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன.

    கர்நாடக மாநிலம் அடிபாலாறு பகுதியில் கடந்த 14-ந்தேதி மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் ராஜா பலியானார். அவரது உடல் காவிரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இதனால் தமிழக-கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள பாலாறு சோதனைச்சாவடியில் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலை மற்றும் மைசூரு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ராஜா உயிரிழந்த நிலையில் இன்று காலை எல்லையை ஓட்டி உள்ள அடிபாலாறு வழியாக காவிரி ஆற்றில் ராஜா உடல் மிதந்து வந்தது.
    • கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் காவிரி கரையோரம் திரண்டனர் ராஜாவின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு ஓடுகிறது. இந்த பகுதியில் பாலாறு, காவிரி ஆற்றுடன் இணையும் இடமாகும். இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானைகளும், மான்களும் அதிக அளவில் உள்ளன.

    இங்குள்ள பாலாற்றங்கரையில் கடந்த 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு மீனவர்களான கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா (வயது 45), செட்டிப்பட்டியை சேர்ந்த ரவி (40), இளையபெருமாள் (40) உள்பட 4 பேர் பரிசல் ஒன்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். மேலும் மான் வேட்டையிலும் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இந்த பகுதி கர்நாடக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள இடமாகும். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர், அவர்களை சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ராஜா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு விழுந்தார். மற்றவர்கள் ஆற்றில் குதித்து தப்பி விட்டனர். ஆனால் ராஜா மட்டும் வீடு திரும்பவில்லை. ராஜா கதி என்ன? என்பது தெரியமால் இருந்து வந்தது.

    போலீசார் மற்றும் வனத்துறையினர் உள்ளூர் பகுதி பொதுமக்கள் உதவியுடன் அடிப்பாலாறு பாலாற்றங்கரை வனப் பகுதியில் ராஜாவை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவர் ஆற்றில் குதித்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பாதாள சோதி சங்கிலி, மற்றும் கொக்கிகளை வீசி பாலாற்றில் தேடினர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    துப்பாக்கி சூடு நடந்து 4 நாட்கள் ஆன நிலையில் உறவினர்கள் சோகத்தில் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ராஜா உயிரிழந்த நிலையில் இன்று காலை எல்லையை ஓட்டி உள்ள அடியாறு வழியாக காவிரி ஆற்றில் ராஜா உடல் மிதந்து வந்தது. இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் காவிரி கரையோரம் திரண்டனர் ராஜாவின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் இறங்கி ராஜாவின் உடலை மீட்டனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக ராஜாவின் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக-கர்நாடக எல்லையில் இரு மாநில போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்ததால் தமிழக-கர்நாடக எல்லை கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×