என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்தல் ஆணையம"
- மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
- அத்துடன் 14 மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபைக்கான தேர்தலுடன் 14 மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
இதையடுத்து, தேர்தல் அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.558 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பரிசு பொருட்கள், மதுபானம், போதை பொருட்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கும்.
மகாராஷ்டிராவில் மட்டும் ரூ.280 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் இருந்து ரூ.158 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது தேர்தல் நடக்கும் 2 மாநிலங்களிலும் சேர்த்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் 3.5 மடங்கு அதிகரித்துள்ளது.
- மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் 20-ம் தேதி நடைபெறுகிறது.
- ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் இரு கட்டமாக நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை பதவிக்காலம் நவம்பர் மாதம் 26-ந்தேதி முடிவடைகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.
அதேபோல், 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிகாலம் ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஜார்க்கண்டில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும், நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாரதிய ஜனதா, அஜித்பவார் கூட்டணி ஆட்சியும் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி ஆட்சியும் நடைபெற்று வருகின்றன.
- சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டது.
- ஷிண்டே அணிக்கு சிவசேனா சின்னம் வழங்கியது ஜனநாயக படுகொலை என உத்தவ் தாக்கரே கூறினார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இதனிடையே, சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது.
அதன்பின், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே மாநில முதல் மந்திரி ஆனார்.
இதையடுத்து, சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சின்னமான வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.
ஆனால் உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று வாதத்தை முன்வைத்தது.
இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியும், கட்சி சின்னமான வில்-அம்பும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி உத்தரவிட்டது.
உத்தவ் தாக்கரே அணி சிவசேனா உத்தவ் பாலாசாகிப் தாக்கரே அணி என்ற பெயரையும், தீப்பந்தம் சின்னத்தையும் வைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டதற்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். சிவசேனா சின்னத்தைத் திருடி விட்டனர். நாங்கள் போராடுவோம். நம்பிக்கையை இழக்க வேண்டாம். தனது திருட்டால் இப்போதைக்கு ஷிண்டே மகிழ்ச்சியாக இருக்கலாம். ஒருமுறை துரோகி என்றால், எப்போதுமே துரோகி தான். ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சியும், சின்னமும் வழங்கப்பட்டது ஜனநாயக படுகொலை என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்