search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவராத்திரி வழிபாடு"

    • சிவராத்திரியை தொடர்ந்து 24 முறையும் அனுசரிக்க வேண்டும்.
    • விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகா சிவராத்திரி.

    சிவபெருமானுக்கே உரிய சிவராத்திரி 5 வகையாக கூறப்பட்டு இருக்கிறது.

    முதலாவதாக நித்திய சிவராத்திரி:

    நித்திய சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வரும். மாதம் இரண்டாக வரும் நித்திய சிவராத்திரியை தொடர்ந்து 24 முறையும் அனுசரிக்க வேண்டும்.

    இரண்டாவதாக பட்ச சிவராத்திரி:

    தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருந்து பட்ச சிவராத்திரியில் சிவபெருமானை வழிபட வேண்டும்.

    மூன்றாவது மாத சிவராத்திரி:

    மாத சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வரும். சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில், ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில், கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில், தை மாதம் சுக்லபட்ச திருதியையில், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில், பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி என்றழைக்கப்படும்.

    நான்காவது யோக சிவராத்திரி:

    திங்கட்கிழமை அன்று பகல், இரவு முழுவதும் அமாவாசையாக பொருந்தி வந்தால் அது யோக சிவராத்திரி.

    ஐந்தாவது மகா சிவராத்திரி:

    பெரும்பாலான சிவராத்திரிகளை கூர்ந்து கவனித்தால் அவை சதுர்த்தசி திதியில் வருவது தென்படும். ஏன் அப்படி? அமாவாசைக்கோ பெளர்ணமிக்கோ முன்பு பதினான்காம் நாளாக வருவது சதுர்த்தசி. அந்த நாள் சிவனுக்குரியது என்பது சாஸ்திரங்கள் கூறும் செய்தியாகும்.

    ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவரவர்க்கேற்ற திதியை ஒதுக்கி வணங்கும் போது சிவனுக்கு ஒதுக்கப்பட்டது தான் சதுர்த்தசி. இந்த சதுர்த்தசி கிருஷ்ணபட்சமானால் மறுநாள் அமாவாசை அதே சுக்லபட்சமானால் மறுநாள் பெளர்ணமி. தொடக்க முடிவு இரண்டுமே அந்த சிவனால் தான் என்பதை உணர்த்தவே இந்த திதி சிவனுக்காக ஒதுக்கப்பட்டது. சிவன் என்றால் மங்களம் என்று பொருள்.

    ராத்திரி என்றால் இரவு. எனவே மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம். எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும் வருஷம் ஒரு முறை மட்டுமே வருவதும் அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வை தருவதும், எல்லா நலன்களையும் தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகா சிவராத்திரி.

    • பரமேஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.
    • விழாவை முன்னிட்டு இரவு 7 மணிக்கு மேல் முதல் கால பூஜை நடைபெற்றது. 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், பரமேஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு இரவு 7 மணிக்கு மேல் முதல் கால பூஜை நடைபெற்றது. அப்போது அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், பரமேஸ்வரனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இரவு 9 மணிக்கு மேல் 2-ம் கால பூஜையும், நள்ளிரவு 12 மணி அளவில் 3-ம் கால பூஜை நடைபெற்றது. அப்போது அருகாமையில் உள்ள மாசாணி அம்மனுக்கு பச்சை பூஜையும், மயான கொள்ளை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து இரவு 3 மணி அளவில் 4-ம் கால பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை தொடர்ந்து நடைபெற்ற பூஜைகளில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

    அதேபோல் பரமத்தி வேலூரில் வல்லப விநாயகர் ஆலயத்தில் உள்ள பானலிங்க விஸ்வேஸ்வரருக்கு மாசி மாத மகா சிவராத்திரியினை முன்னிட்டு 4 கால பூஜை நடைபெற்றது.

    பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திரு வேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன்

    கோவில், ஜேடர்பாளையம் சிவன் கோவில், பிலிக்கல்பா ளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்காரம், 4 கால பூஜைகள் நடைபெற்றன.

    விழாவில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    • பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.
    • ஏற்பாடுகளை அய்யம்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் கதித்தமலை வனம் அமைப்பினர் செய்துள்ளனர்.

    ஊத்துக்குளி :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் அய்யம்பாளையம் செல்லும் வழியில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது மாதேஸ்வர சுவாமி கோவில். சுமார் 300 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில் வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் பிரதோஷ திருநாள் , அமாவாசை ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் நடைபெற்று வருகிறது.

    கதித்தமலை குன்றின் ஒரு பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலின் வலது பக்கத்தில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. திருமண தடையை நீக்கவும், தொழிலில் இடர்பாடுகள் நீக்கவும் பக்தர்கள் மூலவர் மாதேஸ்வர சுவாமியை மண்டியிட்டு வணங்கி தங்களின் கோரிக்கையை மனம் உருகி வேண்டி வருகின்றனர். 

    இக்கோவிலில்மகா சிவராத்திரி சிறப்பு பூஜை இன்று இரவு நடக்கிறது.இதைெயாட்டி இரவு 8மணியில் இருந்து 9மணி வரை முதற்கால சிவ பூஜை நடக்கிறது. 10 மணியில் இருந்து 11 மணி வரை 2-ம் கால ருத்ராபிஷேக பூஜை நடக்கிறது. நாளை 19-ந்தேதி அதிகாலை 2மணியில் இருந்து 3மணி வரை 3-ம் கால சிவ பூஜை நடக்கிறது. அதிகாலை 4மணியில் இருந்து 5 மணி வரை 4-ம் பள்ளய மகா பூஜை நடக்கிறது. சிவராத்திரி வழிபாட்டில் பங்கேற்பதற்காக திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை அய்யம்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் கதித்தமலை வனம் அமைப்பினர் செய்துள்ளனர். 

    ×