என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பகுதி நேர ஆசிரியர்கள்"
- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும்.
- பகுதி நேர பணியாளர்கள் அரசாணை பள்ளிக் கல்வித்துறை கடந்த 11.11.2011-ல் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நியமனம் செய்யப்படுகிறார்கள்.
சென்னை:
பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என்று மாநில திட்ட இயக்குனருக்கு கோரிக்கை மனு கொடுத்து இருந்தார்.
இதற்கு பள்ளி கல்வித்துறை மாநில திட்ட இயக்கக இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். இங்கு பணிபுரியும் முறையான பணியாளர்கள் அயற்பணியிலும் பிற பணியாளர்கள் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தேவைக்கேற்ப பணியமர்த்தப்படுகிறார்கள்.
ஒப்பந்த பணியாளர்கள் வருங்காலத்தில் அரசுத்துறையில் முறையான ஊதியத்திற்கோ ஆண்டு ஊதிய உயர்விற்கோ, நிரந்தர நியமனத்திற்கோ மற்றும் முன்னுரிமைக்காகவோ கோரி விண்ணப்பிக்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்படுகிறார்கள்.
பகுதி நேர பணியாளர்கள் அரசாணை பள்ளிக்கல்வித்துறை கடந்த 11.11.2011-ல் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நியமனம் செய்யப்படுகிறார்கள்.
இந்த அரசாணைப்படி ஆண்டுக்கு 11 மாத ஊதியம் மட்டுமே வழங்க வேண்டும் (மே மாதம் தவிர்த்து) என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- வாரத்தில் 3 அரைநாட்கள் பணிபுரியும் இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.
- பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்ற நீண்டநாள் கோரிக்கையை தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தது.
தாராபுரம் :
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், அரசுப்பள்ளிகளில் தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட, கலைப்பாடப்பிரிவுகள் கையாள பகுதிநேர ஆசிரியர்கள், 2012ல் நியமிக்கப்பட்டனர்.
வாரத்தில் 3 அரைநாட்கள் பணிபுரியும் இவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்ற நீண்டநாள் கோரிக்கையை தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உட்படுத்தி உறுதியளித்தது. ஆட்சியை பிடித்த பின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்காக பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து, போராடி வருகின்றனர். சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும் அறிவிப்பு வெளியாகாதது, ஏமாற்றத்தை அளிப்பதாக புலம்பி வருகின்றனர்.
இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின், மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், தற்போது பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களில் பெரும்பாலானோர் 50 வயதை தாண்டி விட்டனர். இனியும் காலமுறை ஊதியத்திற்குள் வராவிடில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் ஆவண செய்ய வேண்டும் என்றார்.
- 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.
- 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூ தியம் பெறுகின்றனர்.
திருப்பூர் :
அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டட க்கலை, வாழ்வியல்திறன் படிப்புகளை கற்றுத்தர 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூ தியத்தில் நியமிக்கப்ப ட்டனர். தற்போது 12 ஆயிரம் பேர் பணிபுரி கின்றனர். 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூ தியம் பெறுகின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து ஒரு லட்சம் மனுக்களை அனுப்பி வருகிறோம்.
பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வர் என எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். 12 ஆண்டுகளை கடந்து பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றோம்.பெரும்பாலானோர் 50 வயதை கடந்து விட்டார்கள். பணிநிரந்தரம் செய்தால் கூட சிலகாலம் தான் பணியாற்ற முடியும். தி.மு.க., தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடரில் பணிநிரந்தரம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- பகுதிநேர ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும்
- இறுதியாக பெருந்திரள் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
திருப்பூர் :
நடுநிலைப்பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணிணி, தையல், இசை பாடங்களை கற்றுக்கொடுக்க, 2012 ல் 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது 12 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 12 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளித்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப் பாளர் செந்தில்குமார் கூறியதாவது:- தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி, கட்சியின் தேர்தல் அறிக்கை குழு, பள்ளிக் கல்வி, நிதி, இளைஞர் நலத்தறை அமைச்சர்கள், தலைமை செயலர், முதல்வரின் செயலர், பள்ளிக் கல்வி செயலர், பள்ளிக் கல்வி ஆணையர், மாநில திட்ட இயக்குநர் உள்ளிட்டோருக்கு ஒரு லட்சம் மனுக்கள் அனுப்ப உள்ளோம்.
திருப்பூர் மாவட்டத்தில் 388 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளனர். எதிர்கட்சியாக இருந்த போது இதே கோரிக்கையை தி.மு.க., சட்டசபையில் வலியுறுத்தியது. தற்போது, கூட்டணி கட்சிகள் அனைத்தும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை. முதல்வரிடம் தொடர்ந்து மனு வழங்கி வருகிறோம். பதில் இல்லை.
பகுதி நேர ஆசிரியர்களின் 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட, பணி நிரந்தரம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரு லட்சம் மனுக்களை அனுப்ப முடிவு செய்துள்ளோம். இறுதியாக பெருந்திரள் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு செந்தில் குமார் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்