search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டையர்கள்"

    • இந்தோனேசியாவில் அரிதினும் அரிதாக 4 கைகள் 3 கால்கள் மற்றும் ஒரே ஆண்குறியுடன் இரட்டைக் குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளனர்.
    • உடலின் மேல்புறத்தில் அல்லாமல் கீழ்ப்புறத்திலும் ஒட்டிப் பிறந்துள்ள இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது மிகவும் சிக்கலானது.

    இந்தோனேசியாவில் அரிதினும் அரிதாக 4 கைகள் 3 கால்கள் மற்றும் ஒரே ஆண்குறியுடன் இரட்டைக் குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளனர். 2 மில்லயனில் 1 முறையே இதுபோன்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகை இரட்டையர்களுக்கு இசோபேகஸ் த்ரிபஸ் (Ischiopagus Tripus) என்று மருத்துவப் பெயர் உள்ளது. இந்த வகை இரட்டையர்களை 'சிலந்தி இரட்டையர்கள்' என்றும் அழைக்கின்றனர்.

    இந்தோனேசியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் அமெரிக்க மருத்துவ இதழ் இவர்களைக் குறித்து தற்போது வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பிறகே இந்த அரிய வகை இரட்டையர்களின் பிறப்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் அந்த இதழில் குறிப்பிட்டுள்ளபடி, உடலின் மேல்புறத்தில் அல்லாமல் கீழ்ப்புறத்திலும் ஒட்டிப் பிறந்துள்ள இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது மிகவும் சிக்கலானது. இந்த வகை இரட்டையர்களில் ஏதேனும் ஒரு குழந்தை உயிரிழப்பதற்கே 60 சதவீதம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் அதிசயிக்கத்தக்க வகையில் இந்த இரட்டையர்கள் இன்னும் நலமுடன் இருக்கின்றனர். இருப்பினும், அவர்களது உடல் அமைப்பின் காரணமாக முதல் 3 வருடங்களுக்கு அவர்களால் உட்கார முடியாத சூழல் இருந்ததால் அவர்கள் படுத்தே இருக்கும் நிலை ஏற்பட்டது. அதன்பின்னர் மருத்துவர்கள் செய்த சிறிய அறுவை சிகிச்சை காரணமாக தற்போது அவர்களால் அமர முடிகிறது என்று மருத்துவ இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

    • கடந்த கல்வியாண்டில் வெவ்வேறு வகுப்புகளில் 4 ஜோடி இரட்டை குழந்தைகள் பயின்றனர்.
    • சுவாரஸ்யம் என்னவென்றால் 8 ஜோடி இரட்டையர்களில் ஒரு ஜோடி தலைமை ஆசிரியரின் குழந்தைகள் ஆவார்கள்.

    மிசோராம் மாநிலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் 8 ஜோடி இரட்டை குழந்தைகள் புதிதாக சேர்ந்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அங்குள்ள ஐஸ் வால் பகுதியில் ஒரு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தான் புதிதாக 8 ஜோடி இரட்டை குழந்தைகள் சேர்ந்துள்ளனர். இதுதொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் லால்வென்ட் லுங்கா கூறுகையில், எங்கள் பள்ளியில் கடந்த ஆண்டுகளிலும் பல இரட்டை குழந்தைகள் சேர்ந்து பயின்றுள்ளனர்.

    கடந்த கல்வியாண்டில் வெவ்வேறு வகுப்புகளில் 4 ஜோடி இரட்டை குழந்தைகள் பயின்றனர். ஆனால் இந்த ஆண்டு அதிக அளவாக 8 ஜோடி இரட்டையர்கள் சேர்ந்து சாதனை படைத்துள்ளது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இதில் 4 ஜோடி பெண் குழந்தைகளும், 3 ஜோடி ஆண் குழந்தைகளும் அடங்குவர் என்றார்.

    இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 8 ஜோடி இரட்டையர்களில் ஒரு ஜோடி தலைமை ஆசிரியரின் குழந்தைகள் ஆவார்கள். அவரது மகன் ரெம்ருதிகா, மகள் லால்சார்ஜோவி ஆகியோர் எல்.கே.ஜி.யில் சேர்ந்துள்ளனர். அவர்கள் ஜூலை 21-ந் தேதி 5 வயதை எட்டுகிறார்கள்.

    • அரசு உயர்நிலை பள்ளியில் வரலாறு காணாத வகையில் நிறைய இரட்டையர்கள் படித்து வருகிறார்கள்.
    • சரியான நபரை அடையாளம் காண்பதில் தினமும் திணறுகிறார்கள்.

    கர்நாடக மாநிலம் பந்துவால் தாலுகாவில் உள்ள ஒரு அரசு உயர்நிலை பள்ளியில் வரலாறு காணாத வகையில் நிறைய இரட்டையர்கள் படித்து வருகிறார்கள்.

    தற்போது அந்த பள்ளியில் 9-ம் வகுப்பில் 5 இரட்டையர்கள் உள்ளனர். அந்த 5 இரட்டையர்களும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பார்ப்பதற்கு அச்சு அசல் ஒரே மாதிரி காட்சி அளிக்கும் அந்த இரட்டையர்கள் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கடும் சவாலாக உள்ளனர். அவர்களது பெயர்களை ஆசிரியர்கள் நினைவு வைத்திருந்தாலும், சரியான நபரை அடையாளம் காண்பதில் தினமும் திணறுகிறார்கள். இது பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் இன்று வைரலாக பரவியது.

    • மண்ணாங்கட்டி. இவரது மகன்கள் யுவநாதன், (22) யுவராஜ், (22) இரட்டையர்கள். இவர்கள், நேற்று மாலை ஒரு ஏ. டி. எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றனர்.
    • இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதிக பணம் வந்துள்ளதை கண்ட இரட்டையர்கள்.திண்டிவனம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்,

    விழுப்புரம்:

    ஏ. டி. எம்., இயந்திரத்தில் கூடுதலாக வந்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சகோதரர்களை போலீசார் பாராட்டினர்விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது மகன்கள் யுவநாதன், (22) யுவராஜ், (22) இரட்டையர்கள். இவர்கள், நேற்று மாலை திண்டிவனம் புறவழிச்சாலை அருகே, தனியார் ஓட்டல் எதிரே உள்ள ஒரு ஏ. டி. எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றனர். யுவராஜ் வங்கி கணக்கில் ரூ. 3, 500 இருந்துள்ளது. அதில் இருந்து 500 ரூபாய் எடுக்க பட்டனை அழுத்தினார்.

    ஆனால் யுவராஜ் வங்கி கணக்கில் ரூ. 3, 500 இருந்துள்ளது. அதில் இருந்து 500 ரூபாய் எடுக்க பட்டனை அழுத்தினார். ஆனால், 500 ரூபாய்க்கு பதில் ரூ. 10 ஆயிரம் வந்துள்ளதுயுவராஜ் மொபைல் போனுக்கு ரூ. 500 எடுத்ததாக குறுந்தகவல் வந்துள்ளது. ஏ.டி.எம்., இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதிக பணம் வந்துள்ளதாக கருதிய சகோதரர்கள், திண்டிவனம் போலீசில் 9 ஆயிரத்து 500 ரூபாயை ஒப்படைத்தனர். பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சகோதரர்களை போலீசார் பாராட்டினர்.

    ×