search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர்களுக்கு"

    • இதுவரை 20 சதவீதம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு விட்டது.
    • இன்னும் 3 நாட்களுக்குள் பூத் சிலிப் வழங்கி முடிப்பார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 ஓட்டுச்சாவடிகளில் வரும் 27-ந் தேதி இடைதேர்தல் நடக்கிறது. இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,11,025 பேர், பெண் வாக்காளர்கள் 1,16,497 பேர், மற்றவர்கள் 25 பேர் என 2 லட்சத்து 27,547 வாக்காளர்கள் உள்ளனர்.

    வாக்காளர்கள் தகவல் சீட்டு எனப்படும் பூத் சிலிப் ஓட்டுச்சாவடி நிலை அலுவ லர்கள் நேற்று முன்தினம் முதல் வீடு, வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.

    இச்சீட்டில், வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பெயர் இடம் பெற்றுள்ள பாகத்தின் பெயர், பாகம் எண், வரிசை எண், ஓட்டுச்சாவடியின் பெயர், தேர்தல் நாள், ஓட்டுப்பதிவு நேரம் ஆகியவை இருக்கும்.

    இதுபற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் கூறுகையில், இதுவரை 20 சதவீதம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு விட்டது. இன்னும் 3 நாட்களுக்குள் பூத் சிலிப் வழங்கி முடிப்பார்கள்.

    வாக்காளர்கள் வீட்டில் இல்லை உள்ளிட்ட காரணத்துக்காக பூத் சிலிப்பை வழங்க இயலா விட்டால் ஓட்டுச்சாவடியில் மீதமுள்ள பூத் சிலிப் வைக்கப்பட்டிருக்கும். ஓட்டுப்பதிவின்போது வாக்காளர்கள் வந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

    ×