என் மலர்
நீங்கள் தேடியது "முழு ஆண்டு தேர்வு"
- 1ம்- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஒரு கட்டமாக தேர்வு.
- 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வு.
1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
1ம்- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு 3ம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு (முழு ஆண்டு தேர்வு) ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஒரு கட்டமாக நடத்தப்படுகிறது.இதனைத்தொடர்ந்து, கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது.
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நாள் தேர்வை தொடர்ந்து கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது.
1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் ஏப்ரல் 22-ம் தேதி முதல் தொடங்கும். 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 25-ம் தேதி முதல் தொடங்கும். விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2022-2023-ம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது.
- இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சேலம்:
2022-2023-ம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது.
மார்ச் மாதம் தொடங்கும் இந்த தேர்வுகள் ஏப்ரல் மாதம் வரை நடைப்பெற உள்ளது. அதாவது, பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 13-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரையும், பிளஸ்-1, பொதுத் தேர்வு மார்ச் 13-ந்தேதி 14-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரையும் நடைபெற உள்ளது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு பொறுத்தவரை ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதுமிருந்து 27.30 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர்.
1 முதல் 5-ம் வகுப்பு
இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் தேர்வு தொடங்குகிறது. அதே வாரத்தில் தேர்வு முழுவதும் முடிவடைகிறது. மே மாதம் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
தேர்வுக்கான ஏற்பாடு களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மும்முரமாக செய்து வருகிறார்கள். அச்சடிக்கப்பட்ட கேள்வித்தாள்கள் அடங்கிய பண்டல்கள் அனைத்தும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு வந்ததும், அந்த பண்டல்கள் தொடக்கப்பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். 1 முதல் 5 -ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு குறித்த உறுதி பூர்வமான அறிவிப்பை விரைவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் வெளியிட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
சேலம், நாமக்கல்
சேலம் மாவட்டத்தில்
அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள், தனியார் தொடக்கப்பள்ளி கள் 1500-க்கும் அதிகமாக உள்ளன. இதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. முழு ஆண்டு தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகள் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.