என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குழந்தைகள் அவதி"
- பெற்றோர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
- இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் சிறுமுகை,காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாகவும் இருந்து வருகிறது
இதன் காரணமாக ஏராளமான குழந்தைகள் சளி, காய்ச்சல்,இருமல், உள்ளிட்ட உடல் உபாதை களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற்றோர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனுமதித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அரசு தலைமை மருத்து வமனையில் குழந்தைகளு க்கு ஏற்படும் பல்வேறு சிகிச்சை களுக்காக நாள்தோறும் வருகை தருகி ன்றனர்.அதிலும் கடந்த சில தினங்களாக சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட தொந்தரவால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர்.மேலும்,டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பெற்றோர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.