search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.எஸ்.ஷா பேச்சு"

    • நாகர்கோவிலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • இதில் பா.ஜ.க. பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா கலந்து கொண்டு பேசினார்.

    மதுரை

    நாகர்கோவிலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி ராம.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்ஜெட் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் எம்.எஸ்.ஷா பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் அமோக வெற்றி பெற்று பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராவது உறுதி. தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் வாரிசு அரசியல் நடத்தி வருகிறது. இதனால் அந்த கட்சிகளின் தலைமைக்கு அவர்களது வாரிசுகளே வருகிறார்கள்.

    பிரதமர் மோடியின் வாரிசுகள் 150 கோடி இந்திய மக்கள் தான். நாட்டு மக்களுக்காக பிரதமர் பல்வேறு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதற்காக பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கி உலக அரங்கில் வலிமை மிக்க நாடாக இந்தியாவை மாற்றி வருகிறார்.

    சாதாரண, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பட்ஜெட்டில் வருமான வரி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகளில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை பயன்பெறுவார்கள்.

    உலகமே போற்றும் வகையில் சுய சார்பு இந்தியாவாக மோடி மாற்றி வருகிறார்.

    உள் நாட்டிலேயே ரெயில் பெட்டிகள், விமானங்கள், விமான உதிரி பாகங்கள், நவீன எந்திரங்கள் போன்றவை தயாரிக்கப்பட் டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக நாடுகளிடம் கையேந்தும் நிலையை பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் பொருளாதார பிரிவு மாவட்டத்தலைவர் அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். 

    ×