என் மலர்
நீங்கள் தேடியது "ஹர்மன்ப்ரீத் கவுர்"
- விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர்.
- மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.80 கோடிக்கு எடுத்துள்ளது.
149 போட்டிகளில் விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 2992 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 8 ரன்கள் எடுத்தபோது 3 ஆயிரம் ரன்களை எடுத்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 3 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 150 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இந்த ரன்களை கடந்திருக்கிறார். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர்.
33 வயதாகும் ஹர்மன்ப்ரீத் கவுர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்சமாக 103 ரன்களை எடுத்துள்ளார். இது எந்தவொரு இந்திய வீராங்கனையும் செய்யாத சாதனையாகும். இதேபோன்று சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்சர்களை (70) அடித்த வீராங்கனை என்ற ரிக்கார்டையும் அவர் ஏற்படுத்தியுள்ளார்.
இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் டி20 உலகக்கோப்பை தொடரில் 13 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தார். இந்த சாதனையையும் ஹர்மன்ப்ரீத் கவுர் (14) முறியடித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து அனைத்து டி20 உலகக்கோப்பை போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர். மொத்தம் 34 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 500 ரன்களை எடுத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.80 கோடிக்கு எடுத்துள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் மார்ச் 4ஆம் தேதி தொடங்கவுள்ளது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
- 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் டோனி ரன் அவுட் ஆனார்.
இந்திய அணி முன்னாள் கேப்டன் டோனிக்கு நடந்த அதே கொடுமை ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் நடந்ததால் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதாக ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டி நேற்று கேப்டவுனில் நடைபெற்றது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது.
இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு பேட்டிங் மோசமாக சொதப்பியது. ஓப்பனிங் பேட்டர்கள் சஃபாலி வெர்மா 9 ரன்களுக்கும், ஸ்மிருதி மந்தனா 2 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய யாஷ்டிகா பாட்டியா வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்தார். கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவூர் 52 ரன்களும், ஜெமிமா 42 ரன்களும் மட்டுமே அடிக்க 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போது இந்தியா நிறைய விக்கெட்களை இழந்து தடுமாறிய போது டோனி தான் நம்பிக்கை தந்தார். எனினும் அவர் நூலிழையில் ரன் அவுட்டாகி உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. அதே சம்பவம் தான் தற்போதும் நடந்துள்ளது.
World cup semi final match jersey no "7" runout tough to forget.
— Vishnu Dhoni (@vishnukumar2017) February 24, 2023
7 - ? - ??#AUSvIND #INDWvsAUSW #WorldCup #Dhoni #HarmanpreetKaur #MSDhoni
Ms Dhoni ?& Harmanpreet Kaur? ? pic.twitter.com/JPWGqAgDKh
டோனியை போலவே நம்பர் 7 ஜெர்சி அணியும் மகளிர் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 52 ரன்கள் அடித்து சிறப்பாக ஆடி வந்தார். 14.4வது ஓவரில் மிட் விக்கெட்டில் ஸ்வீப் ஷாட் ஆடினார். அப்போது அதனை டைவ் அடித்து பிடித்த கார்ட்னர் வேகமாக ஸ்டம்பிற்கு அனுப்பிவிட்டார். இதனால் கிட்டத்தட்ட கிறீஸை நெருங்கிவிட்ட ஹர்மன்ப்ரீத் கவுர் துரதிஷ்டவசமாக தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இத்துடன் இந்தியாவின் டி20 உலகக்கோப்பை கனவும் தகர்ந்தது. இதனை நினைவுக்கூர்ந்து இருவரும் ரன் அவுட் ஆன வீடியோவை ரசிகர்கள் வேதனையுடன் பகிர்ந்து வருகின்றனர்.
- விஸ்டன் பத்திரிகை முதல் 5 ஆட்டக்காரர்களின் பட்டியலில் கவுரை குறிப்பிட்டது
- டைம் பத்திரிகையின் 100 நெக்ஸ்ட் பட்டியலில் கவுர் பெயர் இடம்பெற்றது
15 வருடங்களாக சர்வதேச பெண்கள் கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளை புரிந்து வருபவர், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (34).
பெண்கள் டி20 (T20) கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடித்த முதல் வீராங்கனை ஹர்மன்ப்ரீத்.
கடந்த பிப்ரவரி மாதம் அவரது சாதனைகளில் ஒன்றாக 150 டி20 போட்டிகளில் விளையாடியவர் எனும் புகழ் பெற்றார்.
மேலும், ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஸ்மிருதி மந்தானாவுடன் இணை கேப்டனாக தங்க பதக்கம் வென்றார்.
கிரிக்கெட் சாதனைகளை குறித்த பதிவுகளை வெளியிடும் பிரபல "விஸ்டன்" (Wisden) பத்திரிகை, இவ்வருடத்தின் முதல் 5 கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் பெயரை குறிப்பிட்டது.
தாக்கத்தை ஏற்படுத்திய முதல் 100 பெண்மணிகள் பட்டியலில் பிபிசி (BBC) செய்தி நிறுவனம் ஹர்மன்ப்ரீத் பெயரையும் சேர்த்தது. அதே போன்று, டைம் (TIME) பத்திரிகை வெளியிட்ட "100 நெக்ஸ்ட்" (100 Next) பட்டியலில் இவர் பெயர் இடம் பெற்றது.
பிற விளையாட்டுகளை விட கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இந்திய மக்களிடையே பெண்கள் கிரிக்கெட்டிற்கும் ஆர்வம் ஏற்பட வைத்த பெருமைக்குரியவர்களில் ஹர்மன்ப்ரீத் ஒருவர். இவரது சாதனைகள் இந்திய பெண்களுக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு வளர காரணமாக இருப்பதாக விமர்சகர்கள் ஒப்பு கொள்கின்றனர்.

பஞ்சாப் மாநில மோகா பகுதியை சேர்ந்தவரான ஹர்மன்ப்ரீத் கவுர், நடுத்தர சீக்கிய குடும்பத்தை சேர்ந்தவர். கமல்தீஷ் சிங் சோதி என்பவரிடம் பயிற்சி எடுத்து கொள்ள தொடங்கியதும், ஹர்மன்ப்ரீத்தின் விளையாட்டு பயணம் ஏறுமுகத்தை காண தொடங்கியது.
கடந்த வருடம் பெண்கள் கிரிக்கெட்டில் புகழ் பெற்ற மிதாலி ராஜ் ஓய்வு பெற்றார். அவருக்கு பிறகு பெண்கள் கிரிக்கெட்டை அனைத்து வடிவங்களிலும் அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்து செல்பவர்களில் ஒருவராக ஹர்மன்ப்ரீத் திகழ்கிறார்.
ஹர்மன்ப்ரீத் இதுவரை 290 சர்வதேச போட்டிகளில் விளையாடி 6,500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.

அவ்வப்போது விளையாட்டு மைதானத்தில் கோபத்தை வெளிப்படுத்துபவராக பார்க்கப்பட்டாலும் விரைவில் பக்குவமுள்ள பவர் ஹிட்டராக (power hitter) கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்ப்பார் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.