என் மலர்
நீங்கள் தேடியது "பாதிக்கப்பட்ட பெண்"
- வெங்க டேசன் மனைவி பத்மாவதி ஆண் குழந்தை பிறந்தது. வீட்டிற்கு சென்ற பிறகு வயிறு பகுதியில் அதிக வலியின் காரணமாக அதே கடலூர் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார்.
- பரிசோதனை செய்த போது பத்மாவதியின் குடல், கர்ப்பவாய் இரண்டையும் சேர்த்து தையல் போடப்பட்டிருந்தது,
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் சிறுவத்தூர் கிராமம் வெங்க டேசன் மனைவி பத்மாவதி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது.வீட்டிற்கு சென்ற பிறகு வயிறு பகுதியில் அதிக வலியின் காரணமாக அதே கடலூர் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார்.அங்கு பரிசோதனை செய்த போது பத்மாவதியின் குடல், கர்ப்பவாய் இரண்டையும் சேர்த்து தையல் போட்டுள்ளதை ஜிப்மர் டாக்டர்கள் கண்டறிந்தனர்
இது தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 5 முறை மனு கொடுத்துள்ளனர். இதன் மீது கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டும், தங்களை எந்த விசாரணைக்கும் அழைக்கவில்லை என்று கூறி பத்மாவதியிpf உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இன்று காலை திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர்.பின்னர் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.