என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் சங்கர்"

    • ஹூடாவிற்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் சி.எஸ்.கே. அணியில் இடம்பிடித்தார்.
    • கடைசியாக 2014ல் சென்னை அணிக்காக விஜய் சங்கர் விளையாடினார்.

    ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    நேற்றைய போட்டியில் ஹூடாவிற்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் சி.எஸ்.கே. அணியில் இடம்பிடித்தார். இதன்மூலம் நீண்ட இடைவெளிக்கு பின் சி.எஸ்.கே. அணிக்கு திரும்பிய வீரர் என்ற அஸ்வினின் சாதனையை (3,591 Days) விஜய் சங்கர் (3,974 Days) முறியடித்தார்

    2014ல் முதல் முறையாக சென்னை அணிக்காக விளையாடிய நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விஜய் சங்கர் களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டது.
    • ஒவ்வொரு அணிக்காக மொத்த ஏலத்தொகை ரூ.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ளூர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக ஐபிஎல் போன்றே, டிஎன்பிஎல் போட்டிகள் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. சர்வதேச வீரர்களும், உள்ளூர் வீரர்களும் இணைந்து ஆடும் இப்போட்டி, தமிழகத்தில் பிரபலமானது. வரும் ஆண்டிற்கான டிஎன்பிஎல் போட்டிக்கான வீரர்கள் தேர்வு குறித்த ஏலம் பற்றி, டிஎன்பிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது.

    அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் இன்று மற்றும் நாளை விளையாட்டு வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா சூப்பர் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை என 8 அணிகள் களத்தில் உள்ளன.

    மேலும் இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் டிஎன்பிஎல் போட்டியில் முதல்முறையாக வீரர்கள் ஏலம் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே டிஎன்பிஎல் நிர்வாகக் குழு, ஒவ்வொரு உரிமையாளரும் 2 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் அதில் ஒரு வீரர், ஏ அல்லது பி பிரிவில் இருந்து மற்றும் மற்றொரு வீரர் சி அல்லது டி பிரிவில் இருந்து.

    மேலும் ஒவ்வொரு அணிக்காக மொத்த ஏலத்தொகை ரூ.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஏ பிரிவு வீரருக்கு ரூ. 10 லட்சம், பி பிரிவு வீரருக்கு ரூ. 6 லட்சம், சி பிரிவு வீரருக்கு ரூ. 3 லட்சம் மற்றும் டி பிரிவு வீரருக்கு ரூ. 1.50 லட்சம் அடிப்படை தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று 12 மணிக்கு வீரர்கள் ஏலம் தொடங்கப்பட்டது. முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டது. விஜய் சங்கரை திருப்பூர் தமிழன்ஸ் ரூ.10.25 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

    ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ் - துஷார் ரஹீஜா (பிரிவு டி) தக்க வைக்கப்பட்ட வீரர் ஆவர்.

    • கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது.
    • வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

    சென்னை:

    டிஎன்பிஎல் போட்டியில் முதல்முறையாக வீரர்கள் ஏலம் முறையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே டிஎன்பிஎல் நிர்வாகக் குழு, ஒவ்வொரு உரிமையாளரும் 2 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் அதில் ஒரு வீரர், ஏ அல்லது பி பிரிவில் இருந்து மற்றும் மற்றொரு வீரர் சி அல்லது டி பிரிவில் இருந்து.

    இந்நிலையில் இன்று 12 மணிக்கு வீரர்கள் ஏலம் தொடங்கப்பட்டது. முதல் வீரராக அறிவிக்கப்பட்ட விஜய் சங்கரை 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன்ஸ் ஏலம் எடுத்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணிக்காக விளையாடும் வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மூன்றாவது வீரராக நடராஜனை 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி ஏலம் எடுத்தது.

    கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது. ஏ பிரிவில் கடைசி வீரரான சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது.

    இதனை தொடர்ந்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடந்து கொண்டிருக்கிறது.

    • டி.என்.சி.ஏ. பிரசிடென்ட் லெவனுக்கு விஜய் சங்கரும், டி.என்.சி.ஏ. லெவனுக்கு ஷாருக்கானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான ஆர்.அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அகில இந்திய புச்சிபாபு கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது.

    இந்தப்போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரசிடென்ட் லெவன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணிகளை தமிழ்நாடு சீனியர் தேர்வு குழு அறிவித்துள்ளது.

    டி.என்.சி.ஏ. பிரசிடென்ட் லெவனுக்கு விஜய் சங்கரும், டி.என்.சி.ஏ. லெவனுக்கு ஷாருக்கானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரசிடென்ட் லெவன் அணி வருமாறு:-

    விஜய் சங்கர் (கேப்டன்), சாய்கிஷோர் (துணை கேப்டன்), அஜித்ராம், கணேஷ், சச்சின், விமல்குமார், லக்சய் ஜெயின், அஜிதேஷ், சந்தீப் வாரியர், டிரிலோக், எம்.முகமது, ராகுல், கிரண், ரித்திக் ஈஸ்வரன், அதிக்-உர்-ரகுமான், முகமது அலி.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணி வருமாறு:-

    ஷாருக்கான்(கேப்டன்), சந்தோஷ் குமார், ஜிதேந்திர குமார், நிதிஷ் ராஜகோபால், மாதவராவ் பிரசாத், சித்தார்த், ராமஅரவிந்த், அஜய் கிருஷ்ணன், சுபங் மிஸ்ரா, குருராக வேந்திரன், சச்சின் ரதி, சுப்பிரமணியம், சரவண குமார், கர்பன்த்சிங், விக்னேஷ், சாமுவேல் ராஜ்.

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான ஆர்.அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தர், அயர்லாந்து போட்டியில் ஆடுவதில் தேர்வு பெற்றுள்ளார். சாய் சுதர்ஷன், பிரகோஷ், ரஞ்சன் பவுல், ஜெகதீசன் ஆகியோர் தேசிய கிரிக்கெட் அகாடமி பயிற்சி முகாமுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

    பாபா அபராஜித்துக்கு திருமணம் நடைபெறுவதால் 20-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை பங்கேற்க மாட்டார். பாபா இந்திரஜித் 2-வது போட்டியில் இருந்து ஆடுவார்.

    • தமிழக அணி 2-வது இன்னிங்சில் 305 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    • சண்டிகர் 2வது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சேலம்:

    90-வது ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

    இதில் டி பிரிவில் இடம்பெற்ற தமிழக அணி தனது 6-வது லீக் ஆட்டத்தில் சண்டிகர் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற சண்டிகர் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தமிழகம் முதல் இன்னிங்சில் 301 ரன்கள் எடுத்தது. ஆண்ட்ரே சித்தார்த் சதமடித்து 106 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய சண்டிகர் முதல் இன்னிங்சில் 204 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஷிவம் பாம்ப்ரி 108 ரன்கள் எடுத்தார்.

    97 ரன்கள் முன்னிலை பெற்ற தமிழகம் 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. தமிழக அணி 5 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர் 150 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 403 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சண்டிகர் அணி களமிறங்கியது. அந்த அணி 50 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் தமிழக அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மனன் வோரா சதம் வீணானது.

    தமிழகம் சார்பில் சாய் கிஷோர், அஜித் ராம் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது விஜய் சங்கருக்கு வழங்கப்பட்டது.

    ×