என் மலர்
நீங்கள் தேடியது "இருளர்கள்"
- சுதந்திர தினத்திற்குள் தங்களுக்கு அத்தியாவசிய வாழ்வாதார குடியுரிமை வேண்டும்.
- மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், சமூக ஆர்வலர் மேத்யு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரை கோயில் தென்பகுதி கடலோரத்தில் பல ஆண்டுகளாக 80-க்கும் மேற்பட்ட இருளர்கள் தற்காலிக குடில் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு குடியிருப்பு வசதி, ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய வசதிகள் இன்றி குடும்பத்துடன் பாதுகாப்பற்ற நிலையில் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் இன்று முதல் முறையாக 76வது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில், அனைத்து குடில் குடியிருப்பு வாசிகளும் ஒன்று சேர்ந்து அப்பகுதியில் தேசியக்கொடி ஏற்றினர்.
பின்னர் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினத்திற்குள் தங்களுக்கு அத்தியாவசிய வாழ்வாதார குடியுரிமை வசதிகள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்றனர்.
மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், சமூக ஆர்வலர் மேத்யு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- குடில் வீடுகளின் தார்பாய் கூரைகள் கிழிந்து நாசமானது.
- வருவாய்துறை அதிகாரிகள் மீட்டு முகாமில் தங்க வைத்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரை கோயில் தென்பகுதியில் ஜெமின் இடம் என்று சொல்லக்கூடிய, கடலோரத்தில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த 85 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக தற்காலிக குடில் அமைத்து வசித்து வருகின்றனர்.
இவர்கள் பழைய பேப்பர் சேகரித்து விற்பது, பாம்பு பிடிப்பது, காட்டுவேலை உள்ளிட்ட கூலிவேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் பாதுகாப்பு கருதி ஏற்கனவே அரசாங்கம், திருக்கழுகுன்றம் அருகே வீடுகட்டி குடியேற நிலம் ஒதுக்கி கொடுத்ததாகவும், அங்கு வேறு சிலர் நிலத்தை ஆக்ரமித்து பயிர் வைத்து விவசாயம் செய்வதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் குடில் வீடுகளின் தார்பாய் கூறைகள் கிழிந்து நாசமானது. இவர்களை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டு முகாமில் தங்க வைத்தனர்.
தற்போது மாமல்லபுரத்தில் இயல்பு நிலை திரும்பியதால் வீடுகளுக்கு வந்து பார்த்தபோது அங்கு தங்க முடியாத அளவிற்கு கூரைகள் சேதமடைந்து கிடந்தது.
தகவலறிந்த திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி, 85 இருளர் குடும்பங்களுக்கும் புதிய தார்பாய்களை வழங்கினார். பின்னர் அவர்களிடம் திருக்கழுகுன்றம் அருகே நடுவக்கரை பகுதியில் நிரந்தரமாக வீடுகட்டி நீங்கள் அங்கு வசிப்பதற்கான ஏற்பாடுகள் விரைந்து செய்யப்படும் என எம்.எல்.ஏ உறுதி அளித்தார்.
அப்போது, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா, வி.சி.க ஒன்றிய செயலாளர் அன்பு, நகர செயலாளர் ஐயப்பன், பேரூராட்சி கவுன்சிலர் மோகன் குமார், சிந்தனை சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இவ்வகை பாம்புகளின் இனப்பெருக்க காலம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- இருளர்கள் பாம்புகளை பிடித்து வடநெம்மேலி பாம்பு பண்ணையில் கொடுத்து அதற்கான தொகையை வாங்குவர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில் 1978ல் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 300 பேர் கொடிய விஷம் கொண்ட நாகம், கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை உள்ளிட்ட பாம்புகளை பிடிக்க வனத்துறையினரின் அனுமதி பெற்றவர்கள்.
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இவ்வகை பாம்புகளின் இனப்பெருக்க காலம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து மற்ற மாதங்களில் காடுகளுக்கு சென்று பாம்புகளை பிடித்து வடநெம்மேலி பாம்பு பண்ணையில் கொடுத்து அதற்கான தொகையை வாங்குவர். தற்போது வனத்துறை அனுமதி வழங்குவது தாமதம் ஆனதால் தற்காலிகமாக பாம்பு பிடிக்கும் பணியை சங்கத்தினர் நிறுத்தி உள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.