என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்கே"

    • விடுதி மாணவர்களுடன் உரையாட ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார்.
    • அவரது காரை தடுத்து நிறுத்தி விடுதிக்கு செல்ல விடாமல் நிர்வாகம் தடுத்தது.

    பீகார் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை கருத்தில் கொண்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் பொதுத் தொடர்பு நிகழ்ச்சி (public interaction programme- Shiksha Nyay Samvad) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார்.

    இந்த திட்டத்தின் கீழ் பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள மிதிலா பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் விடுதியில், ராகுல் மாணவர்களை சந்தித்து உரையாட இருந்தார். ஆனால் ராகுல் காந்தி காரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் ராகுல் காந்தி காரில் இருந்து இறங்கி நடந்து சென்று மாணவர்களை சந்தித்துள்ளார்.

    இந்த நிலையில் தலித் மாணவர்களோடு தொடர்பு கொள்வது பாவமா? என கேள்வி எழுப்பி ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியதற்காக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    தலித், பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மணாவர்களுடன் தொடர்பு கொள்வது அரசியலமைப்புக்கு எதிரானதா?. அவர்களின் படிப்பு, தேர்வுகளுக்கான தேவைகள், வேலைகள் பற்றி அவர்களுடன் பேசுறது பாவமா?.

    பீகாரின் தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்வதை ஐக்கிய ஜனதா தளம்- பாஜக அரசு தடுத்தது சர்வாதிகாரத்தின் உச்சம்.

    இவ்வாறு கார்கே குறிப்பிட்டுள்ளார்.

    ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் "இந்தியா ஒரு ஜனநாயக நாடு, அது அரசியலமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது, சர்வாதிகாரத்தால் அல்ல. சமூக நீதி மற்றும் கல்விக்காக நாம் குரல் எழுப்புவதை யாராலும் தடுக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

    • டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது
    • நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா ஏன் தலையிடுகிறது என்று மத்திய அரசை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது

    இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அரசின் தலையீடு ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.

    • பஹல்காம் சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பிரதமருக்குப் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை கிடைத்ததது
    • கார்கே ஒரு நவீன கால மீர் ஜாபராக மாறி வருகிறார்.

    பஹல்காம் சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடிக்கு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை கிடைத்ததது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியதை அடுத்து பாஜக அவரைத் விமர்சித்துள்ளது.

    கார்கேவின் அறிக்கை துரதிர்ஷ்டவசமானது என்று பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கூறினார். கார்கேவுக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை. ஒருபுறம், அவர்கள் நாட்டுடன் இருப்பதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கூறுகிறார்கள்.

    மறுபுறம், தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்ததால், பிரதமர் காஷ்மீர் பயணத்தைத் தவிர்த்துவிட்டார் என்று கூறப்படுகிறது. நாட்டின் எல்லைகள் மோதலுக்கு உள்ளாகி வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இதுபோன்ற விஷயங்கள் எதிர்பாராதது என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

    இதற்கிடையில், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் கூறுகையில், கார்கே ஒரு நவீன கால மீர் ஜாபராக மாறி வருகிறார். பிரதமருக்கு எதிரான அவரது அறிக்கைகள் அடிப்படையற்றவை மற்றும் கண்டிக்கத்தக்கவை. கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும். கார்கே எங்கிருந்து, என்ன தகவல்களைப் பெற்றார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

    17 ஆம் நூற்றாண்டில் முகலாய அரசில் பணியாற்றிய மிர் ஜாஃபர் ஆங்கிலேயருக்கு ஆதரவாக செயல்பட்டவர். வரலாற்றில் மிர் ஜாஃபர் துரோகியாக அறியப்படுகிறார். 

    • ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம் கூட்டம் பீகாரில் நடைபெற்றது.
    • இதில் கார்கே, பீகார் மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரை நினைவு கூறும் வகையில் மத்திய, மாநில, மாவடட் அளவில் ஜெய்பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம் என்ற கோஷத்துடன் பேரணிகள், கூட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது.

    அந்த வகையில் நேற்று பீகார் மாநிலம் புக்சார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்ட ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம் (Jai Bapu, Jai Bhim, Jai Samvidhan) கூட்டம் தல்சாகார் மைதானத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மல்லிகார்ஜூன உரையாற்றினார். அவரது உரையை கேட்க அதிக அளவில் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான அதிக அளவில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் கார்கே, மாநிலத் தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட போதிலும் அதிக அளவில் கூட்டம் வரவில்லை. அதிக அளவிலான இருக்கைகள் காலியாக இருந்துள்ளது.

    இதனால் புக்சார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மனோஜ் குமார் பாண்டே, ஒத்துழைப்பு குறைபாடு காரணமாக கட்சியின் அனைத்து விதமான பதவிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த பேரணியில் பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அலாவாரு, மாநில காங்கிஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், புக்சார் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. சுதாகர் சிங், சாசாராம் காங்கிரஸ் எம்.பி. மனோஜ் குமார் ராம் மற்றும் பல எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர்.

    • வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் அனைத்து எதிர்ப்புகளை ஒன்றிணைத்தது.
    • இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் எங்களுக்கு ஆதரவு அளித்தன.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் பொதுச் செயலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    * நேசனல் ஹெரால்டு சொத்து முடக்கம், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பெயர் அமலாக்கத்துறையின் குறப்பத்திரிகையில் இடம் பெற்றிருப்பது என அனைத்தும் பழிவாங்கும் செயலாகும்.

    * அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்த பிறகு, அமலாக்கத்துறையின் நடவடிக்கை தற்செயலாக நடந்த நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது.

    * சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான நடவடிக்கையால் நாங்கள் பயப்படப் போவதில்லை.

    * வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் அனைத்து எதிர்ப்புகளை ஒன்றிணைத்தது. இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் எங்களுக்கு ஆதரவு அளித்தன.

    * வக்பு சொத்துக்களில் சர்ச்சையை எழுப்ப அரசு, வக்பில் பயனர்கள் விசயத்தை வேண்டுமென்றே கொண்டு வந்தது.

    * காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் முக்கியத்தும் அளித்துள்ளது.

    இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

    வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது நீதிமன்றம் "வக்பு வாரியங்களில் புதிய உறுப்பினர்களை நியமிக்க தடை விதிக்கிறோம். தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.

    • கட்சிப் பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வெடுக்க வேண்டும்.
    • தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாதவர்கள் ஓய்வு பெற வேண்டும்.

    குஜராத் மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சி பணிக்கு உதவி செய்யாதவர்கள் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக கார்கே பேசியதாவது:-

    கட்சியின் அமைப்புகளை உருவாக்குவதில் மாவட்டத் தலைவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும். எனவே, அவர்கள் கட்சியின் வழிகாட்டுதல்களின்படி பாரபட்சமின்றி நியமனம் செய்யப்பட வேண்டும்.

    நாட்டின் அனைத்து மாவட்டத் தலைவர்களையும் மூன்று கட்டங்களாக அழைத்து பேசியுள்ளோம்.. ராகுல் காந்தியும் நானும் அவர்களுடன் பேசி அவர்களின் கருத்துக்களைப் பெற்றோம். எதிர்காலத்தில், தேர்தல்களுக்கான வேட்பாளர் தேர்வு நடைமுறையில் மாவட்டத் தலைவர்கள் ஈடுபாடு இருக்கும்.

    கட்சிப் பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வெடுக்க வேண்டும். தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாதவர்கள் ஓய்வு பெற வேண்டும்.

    இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

    • லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோலுக்கு 13 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் கலால் வரி வசூலிக்கப்படுகிறது.
    • பண வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசுக் கொள்ளை என்ற மற்றொரு பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்கா உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர விதியை அமல்படுத்தியுள்ளது. இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதித்துள்ளார் டொனால்டு டிரம்ப். இதற்கு இந்தியாவின் எதிர்வினை என்ன என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

    இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது.

    இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் டொனால்டு டிரம்பின் வரி விதிப்புக்கு பிரதமர் மோடி கலால் வரியை உயர்த்தி பதிலடி கொடுத்துள்ளார் என ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். பண வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசுக் கொள்ளை என்ற மற்றொரு பரிசு கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் கார்கே "மோடி ஜி, கச்சா எண்ணெய் விலை கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதத்தை ஒப்பிடும்போது தற்போது 41 சதவீதம் குறைவாக உள்ளது. ஆனால் உங்கள் கொள்ளைடியக்கும் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதற்குப் பதிலாக மத்திய கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோலுக்கு 13 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் கலால் வரி வசூலிக்கப்படுகிறது.

    • தன மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்யத் தயார் என கார்கே சவால்
    • காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன

    மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.

    இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே குடும்பத்தினர், வக்பு சொத்துகளை ஆக்கிரமித்துள்ளதாக மக்களவையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அனுராக் தாகூர் குற்றசாட்டு குறித்து மாநிலங்களவையில் பேசிய கார்கே, "தன் மீது அப்பட்டமான குற்றச்சாட்டை பாஜக முன்வைத்துள்ளது.அனுராக் தாக்கூரின் பேச்சு தன்னை கடுமையாக பாதித்துள்ளது. இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் ராஜினாமா செய்யத் தயார். நிரூபிக்காவிட்டால் அனுராக் ராஜினாமா செய்வாரா?

    கார்கே மீதான குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

    • காலதாமதத்தால் ஏராளமான மக்கள் நிலத்திட்டங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • 1981ஆம் ஆண்டில் இருந்து 10 வருடத்திற்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மல்லிகார்ஜூன கார்கே மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், "காலதாமதத்தால் ஏராளமான மக்கள் நிலத்திட்டங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டில் இருந்து 10 வருடத்திற்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. போர், எமர்ஜென்சி மற்றும் மற்ற நெருக்கடியான நேரங்களில் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

    1931 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்பே, மகாத்மா காந்தி நமது உடல்நிலையை மதிப்பிடுவதற்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படுவதுபோல், மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டிற்கு மிக முக்கியமான பரிசோதனையாகும் எனக் கூறியிருந்தார்" என கார்கே தெரிவித்துள்ளார்.

    • மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் மரபணு, ஏழைகளுக்கு எதிரானது.
    • காங்கிரஸ் கட்சி, அனைவரையும் ஒன்றிணைப்பதற்காக உழைக்கிறது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், நவராய்ப்பூரில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில், கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியல் சாசனம் மீதும், ஜனநாயக மதிப்பீடுகள் மீதும் தொடரும் தாக்குதல்கள், சீன எல்லையில் தேசிய பாதுகாப்பு பிரச்சினை, எப்போதும் விண்ணைத்தொடும் விலைவாசி உயர்வு, வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம் என நாடு சவால்களை சந்தித்து வருகிறது.

    இந்த கடினமான சூழ்நிலைகளில், நாட்டுக்குத் தகுதி வாய்ந்த, தீர்க்கமான தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி மட்டும்தான் உண்டு.

    2004-ம் ஆண்டு தொடங்கி 2014-ம் ஆண்டு வரையில், ஒரே சிந்தனை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடத்தி, நாட்டு மக்களுக்கு சேவை செய்தது.

    நாங்கள் மக்கள் விரோதமான, ஜனநாயக விரோதமான பா.ஜ.க. அரசை தோற்கடிப்பதற்காக ஒரே சிந்தனை கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து சாத்தியமான கூட்டணியை உருவாக்குவதை மீண்டும் எதிர்பார்க்கிறோம்.

    நாங்கள் நாட்டு மக்களின் நலனுக்காக கடினமாக உழைக்கத் தயாராக இருக்கிறோம். வரக்கூடிய சட்டசபை தேர்தல்கள், அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் எங்கள் இலக்குகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக என்ன தியாகம் செய்வதற்கும் தயாராக இருக்கிறோம்.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் மரபணு, ஏழைகளுக்கு எதிரானது. அவர்கள் நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கின்றனர். நாட்டின் தற்போதைய நிலைமைக்கு எதிராக மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும்.

    பிரதம சேவகன் என்று தன்னை அழைத்துக்கொள்கிறவர் (பிரதமர் மோடி), தனது நண்பர்களின் நலன்களுக்காகத்தான் சேவையாற்றிக்கொண்டிருக்கிறார்.

    இந்திய ஜனநாயகத்தை அழிப்பதற்கு சதி நடக்கிறது. காங்கிரஸ் கட்சி, அனைவரையும் ஒன்றிணைப்பதற்காக உழைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த மாநாட்டில், கட்சியின் காரியக்கமிட்டியில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மையினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ற வகையில் கட்சியின் சட்ட திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டது.

    இந்த திருத்தத்தின்படி காங்கிரஸ் காரியக்கமிட்டியில் கட்சியின் முன்னாள் பிரதமர்கள், முன்னாள் தலைவர்கள் இடம் பெறுவார்கள்.

    காங்கிரஸ் காரியக்கமிட்டி உறுப்பினர்கள் எண்ணிக்கை 25-ல் இருந்து 35 ஆக உயர்த்தப்படுகிறது.

    இப்போது முதல் கட்சியில் டிஜிட்டல் வடிவில் உறுப்பினர் சேர்க்கையும், பதிவேடுகளும் இருக்கும்.

    • பாராளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
    • பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.

    கடந்த மே 3ம் தேதி முதல் வன்முறைச் சம்பவங்களைச் சந்தித்த மணிப்பூர் மாநிலம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இதுதொடர்பாக, பாராளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசுவதில்லை, அதற்கு பதிலாக ராஜஸ்தானில் அரசியல் பேச்சு நடத்துகிறார்.

    இன்று, மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். அவர்கள் போராடுவார்கள், அதை தொடருவார்கள். இதனால்  ஜனநாயகத்தின் கோவிலான பாராளுமன்றத்தில் நீங்கள் பேச விரும்பவில்லை. ராஜஸ்தானில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கும்போது  அரசியல் பேச்சு நடத்த விரும்புகிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு ஆகியவை பற்றி விவாதித்து இருக்கிறார்கள்.
    • கட்சியில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு கட்சி பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே ஒவ்வொரு மாநில தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் இன்று கார்கேவை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு ஆகியவை பற்றி விவாதித்து இருக்கிறார்கள். கட்சியில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு கட்சி பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.


    நேற்று மாலையில் கார்கேவின் 50 ஆண்டுகால தேர்தல் அரசியல் பற்றிய புத்தகத்தை சோனியா காந்தி வெளியிட்டார். அந்த புத்தக பிரதிகளை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சிறுபான்மை துறை தலைவர் ரஞ்சன் குமார் உள்ளிட்டோருக்கு கார்கே வழங்கியுள்ளார். இதற்கிடையில் முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரமும் கார்கேவை தனியாக சந்தித்து பேசி உள்ளார்.

    ×