search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஷ்மீரில்"

    எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் திருநங்கைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்

    கன்னியாகுமரி, பிப்.26-

    மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மிஸ்கான் ரகுவன்சி (வயது 22). கல்லூரி மாணவியான இவர் ஒரே பாரதம், உண்மையான பாரதம் மற்றும் பெண்கள் உரிமை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

    கடந்த 1-ந்தேதி காஷ்மீரில் இருந்து புறப்பட்ட அவர் 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாட்களில் கடந்து கன்னியாகுமரி வந்தார். பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பணக்குடியை சேர்ந்த திருநங்கைகள் வினோதினி, முஜி, வாணி ஆகியோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    சைக்கிள் பயண வீராங்கனை மிஸ்கான்ரகுவன்சி கூறுகையில், தான் தினமும் 100 முதல் 150 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாகவும், நாட்டில் பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக்கு கேள்விக்குறி எழுந்து உள்ளதால் அதனை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு முன்பு நர்மதை நதிக்கரையில் 3200 கிலோமீட்டர் தூரத்தை 19 நாட்களில் சைக்கிள் மூலம் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

    ×