search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோள் சீலை"

    அமைச்சர் மனோதங்கராஜ் தகவல்

    நாகர்கோவில்,பிப்.26-

    நாகர்கோவிலில் தோள் சீலை போராட்ட 200-வது ஆண்டு விழா மாநாடு வருகிற 6-ந்தேதி நடக்கிறது.

    இந்த மாநாடு குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத் திற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில்அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், மாத்தூர் ஜெயன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தோள் சீலை போராட்ட 200-வது ஆண்டு மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மேயர் மகேஷ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    இந்திய துணை கண்டத்தின் ஏற்றத்தாழ்வு மற்றும் அடக்குமுறைக்கு எதிரான சமூக நீதி போராட்டம் கடந்த 1822-ம் ஆண்டு முதல் திருவி தாங்கூர் சமஸ்தானத்தில் தொடங்கி யது. அதன்பிறகு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களை போற்றுகிற வகையிலும், அவர்களது பெருமைகளை இளைஞர்களுக்கு எடுத்துரைக்கும் வகை யிலும் தோள் சீலை மாநாடு வருகிற 6-ந் தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடக்கிறது.

    இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். மேலும் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முத்தரசு மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலை வர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து மறுநாள் 7-ந்தேதி காலை மாநகராட்சி கட்டி டத்தையும், ஒழுகின சேரியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் கருணாநிதி சிலையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முன்னதாக 6-ந் தேதி இரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதைத் தொடர்ந்து நாகர்கோவில் நாகராஜா கோவில் மைதானத்தை அமைச்சர் மனோ தங்க ராஜ், மேயர் மகேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ×